சலங்கை ஒலி
சலங்கை ஒலி (Salangai Oli) 1983 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ‘சாகர சங்கமம்’ என்ற பெயரில் வெளியான தெலுங்குத் திரைப்படத்தின் தமிழ் மொழி வடிவமே இந்தத் திரைப்படமாகும்.[1][2] 1983ல் கே. விஸ்வநாத் இயக்கத்தில், இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயபிரதா, எஸ். பி. ஷைலஜா மற்றும் சரத் பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.[3]
சலங்கை ஒலி | |
---|---|
திரைப்பட விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | கே. விஸ்வநாத் |
தயாரிப்பு | ஏடிக. நாகேஸ்வர ராவ் |
கதை | கே. விஸ்வநாத் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஜெயபிரதா |
ஒளிப்பதிவு | பி. எஸ். நிவாஸ் |
படத்தொகுப்பு | ஜி. ஜி. கிருஷ்ணா ராவ் |
வெளியீடு | 3 சூன் 1983 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படமானது சிஎன்என்-ஐபிஎன் நிறுவனம் வெளியிட்ட இந்தியாவில் 100 சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இடம் பெற்றது. தெலுங்கு பதிப்பான 'சாகர சங்கமம்' பெங்களூர் பல்லவி திரையரங்கில் அதிகபட்சமாக 511 நாட்கள் வரை ஓடியது.[4] தமிழ் மொழியிலும் 100 நாட்கள் மேல் ஓடிய வெற்றி படமாக அமைந்தது. தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக என நான்கு மாநிலங்களிலும் 100 நாட்கள் மேல் ஓடிய முதல் திரைப்படமாகும்.
கதை
பரதநாட்டியத்தை உயிராய் மதிக்கும் பாலு, சிறந்த நாட்டியக்காரனாக வரவேண்டும் என்று முயற்சிக்கிறான். விதி வசத்தால் அது நடக்காமல் போக, ஒரு குடிகாரனாக ஆகிறான். அதே சமயம் ஒரு பத்திரிக்கையாளனாகவும் பணிபுரிகிறான். ஒரு முறை ஷைலஜா என்ற பெண் நடனமாடும்போது செய்யும் தவறுகளை தன் பத்திரிகை வாயிலாக சுட்டிக்காட்டுகிறான். அதை படிக்கும் ஷைலஜாவின் அம்மா மாதவி பாலு ‘யார்’ என்பதை தெரிந்துகொண்டு, அந்த பாலுவிடமே தன் மகளை பரதம் கற்க அனுப்புகிறாள். அந்த பாலுவிற்கும், இந்த மாதவிக்கும் என்ன சம்மந்தம்? பாலுவின் கலைசேவைக்கான அங்கீகாரம் கிடைத்ததா? இது போன்ற பல கேள்விகளுக்கு மிக அழகான காட்சிகளோடும், அருமையான இசையோடும் விவரித்திருக்கும் படம் தான் இந்த ‘சலங்கை ஒலி’.
நடிகர்கள்
- கமல்ஹாசன்
- ஜெயபிரதா
- சரத் பாபு
- எஸ். பி. சைலஜா
- சாஹ்சி ரங்க ராவ்
- டப்பிங் ஜானகி
- சக்ரி டொலெட்டி
- மஞ்சு பார்கவி
- கீதா
பாடல்கள்
இளையராஜா அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து தமிழ் பாடல்களும் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "பாலகனகமாய" | எஸ். ஜானகி | தியாகராஜர் | 03:52 |
2 | "மௌனமான நேரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | வைரமுத்து | 04:20 |
3 | "நாத வினோதங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 04:05 | |
4 | "ஓம் நமசிவாய" | எஸ். ஜானகி | 04:41 | |
5 | "தகிட ததிமி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:12 | |
6 | "வேதம் அணுவிலும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 05:33 | |
7 | "வான் போலே வண்ணம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | 04:12 |
விருதுகள்
இத்திரைப்படமானது 1984இல் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இரசிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் ஆசிய பசிபிக் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.
விருது பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
விருது | நாள் | பிரிவு | பெயர் | முடிவு | மேற். |
தேசிய திரைப்பட விருதுகள் | 31வது தேசிய திரைப்பட விருது (ஜீன் 1984) | சிறந்த இசையமைப்பாளர் | இளையராஜா | Won | [5] |
சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | Won | |||
நந்தி விருது | 1983 | சிறந்த திரைப்படம் (வெண்கலம்) (தெலுங்கு) | கே. விஸ்வநாத் (இயக்குநர்) எடிட நாகேஸ்வர ராவ் (தயாரிப்பாளர்) |
Won | |
சிறந்த நடிகர் (தெலுங்கு) | கமல்ஹாசன் | Won | |||
சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான விருது (வெண்கலம்) | எஸ். ஜானகி | Won | |||
சிறந்த கலை இயக்குநர் | தோட்டா தரணி | Won | |||
சிறந்த படத்தொகுப்பாளர் | ஜி. ஜி. கிருஷ்ண ராவ் | Won | |||
சிறந்த ஒலி அமைப்பாளர் | ஏ. ஆர். சுவாமிநாதன் | Won | |||
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | 31வது தென்னிந்திய பிலிம்பேர் விருது (1984) | சிறந்த நடிகர் (தெலுங்கு) | கமல்ஹாசன் | Won | [6] |
சிறந்த நடிகை (தெலுங்கு) | ஜெயபிரதா | Won | |||
சிறந்த இயக்குநர் (தெலுங்கு) | கே. விஸ்வநாத் | Won |
மேற்கோள்கள்
- ↑ கண்ணன், சுரேஷ் (24 ஆகஸ்ட் 2020). "29 வயதில் கமல் ஏற்ற 60 வயது வேடம்; `இந்தியப் பேரழகி’ ஜெயப்ரதா... `சலங்கை ஒலி' வெற்றி பெற்ற கதை!". ஆனந்த விகடன். https://cinema.vikatan.com/tamil-cinema/nostalgia-series-revisiting-kamal-haasans-classic-salangai-oli-aka-sagara-sangamam.
- ↑ ராம்ஜி, வி. (04 சூன் 2020). "37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை ஒலி’". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/blogs/557803-salangai-oli-37-years.html.
- ↑ "சலங்கைஒலி ரீ-மேக்கில் நடிக்க ஆசைப்படும் கமல்ஹாசன்". http://m.dinamalar.com/cinema_detail.php?id=1246. தினமலர் (நவம்பர் 10, 2009)
- ↑ https://cinemacinemacinemasite.wordpress.com/2019/09/28/saagara-sangamams-marathon-run-pallavi-bangalore/
- ↑ "31st National Film Awards" (PDF). Directorate of Film Festivals இம் மூலத்தில் இருந்து 24 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120424114953/http://dff.nic.in/2011/31st_nff_1984.pdf. பார்த்த நாள்: 9 December 2011.
- ↑ "Collections". Update Video Publication. 16 December 1991. https://books.google.com/books?redir_esc=y&id=Q5UqAAAAYAAJ&focus=searchwithinvolume&q=1983+Kamalahasan++Sagara+Sangamam.