சரணாலயம் (திரைப்படம்)
சரணாலயம் (Saranalayam) 1983 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மோகன், நளினி, தேங்காய் சீனிவாசன் , மனோரமா, எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். எம். எஸ். விஸ்வநாதனால் அமைக்கப்பட்ட பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படம் திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேல் காட்சிப்படுத்தப்பட்டு வெள்ளி விழா கொண்டாடியது.
சரணாலயம் Saranalayam | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | எஸ். என். எஸ். திருமால் |
திரைக்கதை | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | மோகன் நளினி தேங்காய் சீனிவாசன் மனோரமா எஸ். எஸ். சந்திரன் கருப்பு சுப்பையா குள்ளமணி |
ஒளிப்பதிவு | பேபி |
படத்தொகுப்பு | கந்தசாமி |
கலையகம் | அஷ்டலட்சுமி பிக்சர்ஸ் |
வெளியீடு | 30 செப்டம்பர் 1983 |
ஓட்டம் | 108 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- மோகன் [1]
- நளினி
- தேங்காய் சீனிவாசன்
- மனோரமா
- எஸ். எஸ். சந்திரன்
- கருப்பு சுப்பையா
- குள்ளமணி
- ஆர். சுந்தர்ராஜன் - விருந்தினர் தோற்றம்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும் கங்கை அமரனும் இயற்றியிருந்தனர்.[2]
எண். | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
1 | "கொல்லிமலை காட்டுக்குள்ள" | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | 04:03 |
2 | "நெடுநாள் ஆசை ஒன்று" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 04:09 |
3 | "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை" | மலேசியா வாசுதேவன் | 04:26 |
4 | "நம்ம சங்கிலியில் மாட்டுனாரு" | எல். ஆர். ஈஸ்வரி | 03:38 |
5 | இன்று காற்றுக்கும் மலருக்கும்" | மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் | 04:11 |
6 | "நீ ஒத்துகிட்டா பத்துதரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 03:05 |
மேற்கோள்கள்
- ↑ "Saranalayam" (in en). https://spicyonion.com/movie/saranalayam.
- ↑ Saranalayam Songs: Saranalayam MP3 Tamil Songs by M S Viswanathan Online Free on Gaana.com, archived from the original on 2020-02-02, retrieved 2020-02-02