சம்பூர்ண ராமாயணம்

சம்பூர்ண ராமாயணம் என்பது 1958 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் இந்து தொன்மவியல் இதிகாசமான வால்மீகியின் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன் மற்றும் என். டி. ராமராவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கே. வி. மகாதேவன் இசையில் எம். ஏ. வேணு தயாரித்திருந்தார். கே. சோமு இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 14 ஏப்ரல் 1958ல் வெளிவந்தது.[2]

சம்பூரண இராமாயணம்
இயக்கம்கே. சோமு
தயாரிப்புஎம். ஏ. வேனு
கதைஏ. பி. நாகராசன்
மூலக்கதைஇராமாயணம்
படைத்தவர் வால்மீகி
திரைக்கதைஏ. பி. நாகராசன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
என். டி. ராமராவ்
பத்மினி
தி. க. பகவதி
பி. வி. நரசிம்மபாரதி
சித்தூர் வி. நாகையா
எஸ். வி. ரங்கராவ்
ஜி. வரலட்சுமி
ஒளிப்பதிவுவி.கே. கோபண்ணா
படத்தொகுப்புடி. விஜயரங்கம்
கலையகம்எம். ஏ. வி. பிச்சர்ஸ்
விநியோகம்எம். ஏ. வி. பிச்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1958 (1958-04-14)[1]
ஓட்டம்204 நிமிடங்கள்
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

கே.வி. சீனிவாசன் என். டி. ராமராவுக்கு தமிழில் குரல் கொடுத்தார். இத்திரைப்படம் 1959 சனவரி 14 ல் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளிவந்தது.[3]

வகை

காப்பியப்படம்

கதை

இத்திரைப்படத்தின் கதை இராமாயணத்தில் இராமனுடைய பிறப்பிலிருந்து விவரிப்பதாக அமைந்துள்ளது.

பரதனின் (சிவாஜி கணேசன்) தாயின் சூழ்ச்சியின் காரணமாக முடிசூடவிருந்த இராமர் 14 வருடங்கள் வனவாசம் செல்ல ஏற்பட்டது. இச்சம்பவமறியாது தாய் கூறிய பின் தெரிந்து கொள்ளும் பரதன் தன் தாயை அவதூறாகப் பேசியவாறு ராமரின் பாதம் நோக்கி ஓடுகிறான். அங்கு இராமருக்கு சேவையாற்ற விரும்பும் பரதனின் அன்பினை மெச்சுகின்றார் இராமரும். பின்னர் நடைபெறும் காப்பியச் சிறப்புமிக்க இராமரின் இலங்கை யுத்தம் இராவண அழிப்பு என்பன திரைக்கதை முடிவாகும்.

நடிகர்கள்

படக்குழு

ஆதாரங்கள்

  1. "Sampoorna Ramayanam Release". nadigarthilagam. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  2. "Sampoorna Ramayanam". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  3. "Sampurna Ramayama (Telugu)". aptalkies. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சம்பூர்ண_ராமாயணம்&oldid=33097" இருந்து மீள்விக்கப்பட்டது