சதுரகிரி சந்தனமகாலிங்கம் கோயில்


சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் எதிரில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. பதினெண் சித்தர்களின் தலைமை பீடமாக சந்தனமகாலிங்கம் கோயில் விளங்குகிறது. இக்கோயில் வளாகத்தில் பார்வதி சந்தனமகாதேவியாக தனியாக காட்சியளிக்கிறார். மலை அருவிக்கரையில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசை நாளில் இலட்சக் கணக்கான பக்தர்கள் சந்தனமகாலிங்கத்தை வழிபட வருவார்கள்.

படிமம்:Santhana MahaLingam Temple.jpg
சந்தனமகாலிங்கம் கோயில், சதுரகிரி மலை
படிமம்:Sanathana Mahadevi Temple.jpg
சந்தனமகாதேவி கோயில்
படிமம்:Santhana MahaLingam Temple Complex.jpg
சந்தனமகாலிங்கம் கோயில் வளாகம்

இக்கோயில் வளாகத்தில் சட்டமுனியின் குகை மற்றும் பதினெண் சித்தர்கள், சனி பகவான், முருகன் மற்றும் விநாயகருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

அமைவிடம்

சந்தன மகாலிங்கம் கோயில், மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் தென் பகுதியில் உள்ள மலையில், கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

பூஜைகள் & விழாக்கள்

சிறப்பு பூஜை நாட்கள்

அன்றாட பூஜைகளுடன், மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோச காலங்களில் சிறப்பு பூஜைகள் அபிசேக, ஆராதனைகளுடன் நடைபெறுகிறது.

முக்கிய விழாக்கள்

போக்குவரத்து

தாணிப்பாறையிலிருந்து சந்தனமகாலிங்கம் கோயிலை அடைய, 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும்.

அன்னதானம்

முக்கிய பூஜைகள் மற்றும் முக்கிய விழாக்களின் போது சந்தனமகாலிங்கம் கோயிலுக்கு வருகை பக்தர்களுக்கு, மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.

இதனையும் காண்க

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்