சதரத்தின சங்கிரகம்

சதரத்தின சங்கிரகம் [1] என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றிய வடமொழி நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் உமாபதி சிவாசாரியர். வடமொழி ஆகமங்கங்களாகிய சுவாயம்புவம், நிச்சுவாசம், மதங்கம், தேவியாமதம், மிருகேந்திரம், கிரணம், பராக்கியம், தேவிகாலோத்தரம், விசுவசாரம், ஞானோத்தரம் ஆகியவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட நூல் இது. 100 பாடல்கள் கொண்டது. 100 பாடல்கள் சத ரத்தினங்கள் அதாவது 100 மணிக்கற்கள் என்னும் பொருள்படுமாறு நூலின் பெயர் இடப்பட்டுள்ளது.

இவற்றிற்கு இதன் ஆசிரியரே ‘சதரத்தின உல்லேகினி’ என்னும் பெயரில் ஒரு விளக்கவுரையும் எழுதியிருக்கிறார்.

கருவிநூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. பஞ்சான சாஸ்திரியாரின் பதிப்பு, கல்கத்தா, 1944
"https://tamilar.wiki/index.php?title=சதரத்தின_சங்கிரகம்&oldid=17217" இருந்து மீள்விக்கப்பட்டது