சஜித் பிரேமதாச

சஜித் பிரேமதாச (Sajith Premadasa, சிங்களம்: සජිත් ප්‍රේමදාස, பிறப்பு: சனவரி 12, 1967) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

சஜித் பிரேமதாச
Sajith Premadasa

நா.உ.
Sajith Premadasa.jpg
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
6 திசம்பர் 2019
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மகிந்த ராசபக்ச
முன்னவர் மகிந்த ராசபக்ச
வீடமைப்பு, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
20 திசம்பர் 2018 – 17 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் விமல் வீரவன்ச
பின்வந்தவர் மகிந்த ராசபக்ச
வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் இவரே
பின்வந்தவர் விமல் வீரவன்ச
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர்
பதவியில்
24 செப்டம்பர் 2014 – 17 நவம்பர் 2019
முன்னவர் கரு ஜயசூரிய
பின்வந்தவர் எவருமில்லை
பதவியில்
2011–2013
முன்னவர் கரு ஜயசூரிய
பின்வந்தவர் கரு ஜயசூரிய
அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2000
சுகாதாரத்துறை துணை அமைச்சர்
பதவியில்
2001–2004
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தனிநபர் தகவல்
பிறப்பு 12 சனவரி 1967 (1967-01-12) (அகவை 58)
கொழும்பு, இலங்கை
வாழ்க்கை துணைவர்(கள்) ஜலனி பிரேமதாச
பெற்றோர் ரணசிங்க பிரேமதாசா
ஏமா பிரேமதாச
படித்த கல்வி நிறுவனங்கள் இலண்டன் பொருளியல் பள்ளி
மேரிலன்ட் பல்கலைக்கழகம் (காலேஜ் பார்க்)
தொழில் அரசியல்வாதி
இணையம் அதிகாரபூர்வ இணையதளம்

முன்னாள் அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாச கொழும்பு றோயல் கல்லூரியிலும், மில் ஹில் பாடசாலையிலும் கல்வி கற்று, இலண்டன் பொருளியல் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றார். மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை மேற்கொண்ட இவர் 1993 ஆம் ஆன்டில் இவரது தந்தை படுகொலை செய்யப்பட்டதை அடுத்து நாடு திரும்பினார். தந்தையின் ஐக்கிய தேசியக் கட்சியில் உறுப்பினராக இணைந்து அரசியலில் இறங்கினார். 2000 ஆம் ஆண்டில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்ரத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் சுகாதாரத் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2011 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரானார். 2015 இல் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2019 நவம்பரில் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 41.99% வாக்குகள் பெற்று இலங்கை பொதுசன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் தோற்றார். இதனை அடுத்து 2019 திசம்பரில் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்டார்.[2]பின் 2020 நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

மேற்கோள்கள்

  1. "Sajith Premadasa Appointed As Sri Lanka Opposition Leader". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-05.
  2. New Cabinet Ministers were sworn in

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சஜித்_பிரேமதாச&oldid=24810" இருந்து மீள்விக்கப்பட்டது