சசிவன்ன போதம்

சசிவன்ன போதம் என்பது தத்துவராயர் பாடிய மோகவதைப் பரணி நூலின் பகுதி. இது ஒரு பகுதி நூலே ஆயினும் தமிழில் வேதம் பயில விரும்புவோர் முதலில் பயிலும் நூலாக அமைந்துந்துள்ளது. எனவே இந்த நூல் பலமுறை அச்சிடப்பட்டுப் பலராலும் பயிலப்பட்டுவந்தது. இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டு.

சசிவன்ன போதம் 110 தாழிசைபாடல்கள் கொண்டது. வடமொழி ‘சூதசங்கிதை’ நூலின் முத்தி காண்டத்தில் சொல்லப்படும் பொருளைத் தமிழிலுள்ள சசிவன்ன போதப் பகுதி விளக்குகிறது. 17-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விருதாசல புராணம் என்னும் நூலின் இறுதியில் சசிவன்ன சருக்கம் என்னும் பகுதி 30 பாடல்களில் அமைந்துள்ளது.

சசிவன்னன் கதை

சசிவன்னன் கதையைப் பரமேசுரன் திருமாலுக்குச் சொன்னான்.

பாசுயெக்கியன் என்னும் அந்தணனின் மகன் சசிவன்னன். வெண்ணிற ஆடை உடையவன். எல்லாருக்கும் எல்லாக் கொடுமைகளையும் செய்துவந்தான். அதன் பயனாய் அவனைக் கொடிய நோய் பற்றிக்கொண்டது. பெரிதும் துன்பப்பட்டான். மகன் நிலை கண்டு தந்தை மனம் வருந்தினார். தந்தை மகனுக்கு நல்ல குருவைத் தேடினார். உமையம்மையைத் தன் மகனுக்கு அறிவு புகட்டும்படி வேண்டினான். உமை அறிவு புகட்ட, சசிவன்னன் திருந்தி நலம்பெற்றான்.


கருவிநூல்

"https://tamilar.wiki/index.php?title=சசிவன்ன_போதம்&oldid=16294" இருந்து மீள்விக்கப்பட்டது