சக்தி சிதம்பரம்
சக்தி சிதம்பரம் இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் லவ்லி, சார்லி சாப்ளின், இங்கிலிஸ்காரன் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்கம் மட்டுமின்றி திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இவரது இயற்பெயர் சி. தினகரன் ஆகும்.[1]
சக்தி சிதம்பரம் | |
---|---|
பிறப்பு | சி. தினகரன் |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1997 - தற்போது |
திரையுலக வாழ்க்கை
இவர், கோட்டை வாசல், போக்கிரி தம்பி, பதவி பிரமாணம், வீட்டை பாரு நாட்டை பாரு உழியன். உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். 1997இல் பாசிகர் என்னும் இந்தி திரைப்படத்தின் மறுஆக்கமான சாம்ராட் திரைப்படத்தை ராம்கியை வைத்து இயக்கியதன் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1989இல் மன்சூர் அலி கான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களுமே தோல்வியைச் சந்தித்த திரைப்படங்களாகும்.[2]
சிறிது இடைவெளிக்குப் பிறகு தனது பெயரை மாற்றிக் கொண்டு என்னம்மா கண்ணு என்னும் சத்யராஜ் நடித்த திரைப்படத்தை இயக்கினார். இது ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது.[3] இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் மிஸ்டர் நாரதர் என்னும் திரைப்படத்தில் இணைய திட்டமிட்டனர். ஆனால் இப்படம் கைவிடப்பட்டது.[4] பின்னர் கார்த்திக் நடித்த லவ்லி திரைப்படத்தை இயக்கினார்.[5] இப்படத்தைத் தொடர்ந்து, பிரபுவும், பிரபுதேவாவும் இணைந்து நடித்த சார்லி சாப்ளின் திரைப்படத்தை இயக்கினார். இது ஒரு சிறந்த வெற்றித் திரைப்படமாக அமைந்தது. தமிழில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இப்படம் இதர இந்திய மொழிகளில் மறுஆக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இனிது இனிது காதல் இனிது, காதல் கிறுக்கன் திரைப்படங்களை இயக்கினார். இவ்விரு திரைப்படங்களும் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை.
சத்யராஜ் உடன் மீண்டும் இணைந்து இங்கிலிஸ்காரன், கோவை பிரதர்ஸ் திரைப்படங்களை இயக்கினார். இவ்விரு திரைப்படங்களும் சிறப்பான வெற்றியைப் பெற்றன.[6][7]
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | நடித்தவர்கள் |
---|---|---|---|
1997 | சாம்ராட் | தமிழ் | ராம்கி |
2000 | என்னம்மா கண்ணு | தமிழ் | சத்யராஜ், தேவயானி |
2001 | லவ்லி | லவ்லி | கார்த்திக், மாளவிகா, மோனல் |
2002 | சார்லி சாப்ளின் | தமிழ் | பிரபு, பிரபுதேவா, அபிராமி |
2003 | காதல் கிறுக்கன் | தமிழ் | ரா. பார்த்திபன், ரிச்சா பல்லர்ட், வடிவேலு |
2003 | இனிது இனிது காதல் இனிது | தமிழ் | ஜெய் ஆகாஷ் |
2004 | மகா நடிகன் | தமிழ் | சத்யராஜ், நமிதா |
2005 | இங்கிலிஸ்காரன் | தமிழ் | சத்யராஜ், நமிதா |
2006 | கோவை பிரதர்ஸ் | தமிழ் | சத்யராஜ், சிபிராஜ், நமிதா |
2007 | வியாபாரி | தமிழ் | எஸ். ஜே. சூர்யா, தமன்னா, நமிதா |
2008 | சண்டை | தமிழ் | சுந்தர் சி., நதியா |
2009 | ராஜாதி ராஜா | தமிழ் | ராகவா லாரன்ஸ் |
2010 | குரு சிஷ்யன் | தமிழ் | சத்யராஜ், சுந்தர் சி. |
2015 | ஜெயிக்கிற குதிரை | தமிழ் | ஜீவன் |
2015 | மச்சான் | தமிழ் | விவேக், கருணாஸ் |
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | நடித்தவர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1999 | ஜோடி | பிரசாந்தின் நண்பர் | பிரசாந்த், சிம்ரன் | தினகர் |
2007 | வியாபாரி | எஸ். ஜே. சூர்யா, தமன்னா | "வியாபாரி பாடலில் சிறப்புத் தோற்றம் | |
2013 | தில்லுமுல்லு | திரைப்பட இயக்குநர் | சிவா | சிறப்புத் தோற்றம் |
2015 | மச்சான் | ரமேஷ் அரவிந்த், விவேக், கருணாஸ், நமிதா |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2011-07-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110724173417/http://www.koodal.com/tamil/movies/directors/sakthichidambaram.
- ↑ http://cinematoday2.itgo.com/Hot%20News1%20.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-04-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150403022911/http://www.thiraipadam.com/cgi-bin/movie_review.pl?id=5&user_name=bbalaji&review_lang=english&lang=english.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2001-02-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010207000727/http://www.chennaionline.com/location/narathar.asp.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140408225308/http://www.hindu.com/2001/07/13/stories/09130222.htm.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402222738/http://www.thiraipadam.com/cgi-bin/movie_review.pl?id=478&user_name=bbalaji&review_lang=english&lang=english.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140125120547/http://www.sify.com/movies/kovai-brothers-review-tamil-14149729.html.