கொனார்க் சூரியக் கோயில்

கொனார்க் சூரியக் கோயில் (Konark Sun Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கொனார்க் என்ற ஊரில் உள்ளது. இக்கோவில் பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் சிவப்பு மணற்கல்களாலும் கருப்பு கருங்கல் கற்களாலும் கட்டப்பட்டது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர் வடிவ சூரியக் கோயில் ஆகும்.[1] கோனார்க் சூரியக் கோயில் ஆகும். மன்னர் முதலாம் நரசிங்க தேவனின் (பொ.ஊ. 1238–1264) காலத்தில் கட்டப்பட்டது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சூரியக் கோயில், கொனார்க்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Sun Temple Main Structure, Konark, Orissa.jpg
வகைபண்பாடு
ஒப்பளவுi, iii, vi
உசாத்துணை246
UNESCO regionஉலகப் பாரம்பரியக் களம்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1984 (8th தொடர்)

வரலாறு

 
சூரியத் தேரின் சக்கரம்

"இங்கே, கல்லின்மொழி மனிதனின் மொழியை தாண்டிச்செல்கிறது" என்று வியந்து கூறியிருக்கிறார், மகாகவி இரவீந்திரநாத் தாகூர். இப்படி அவரை வியக்க வைத்தவை, கொனார்க் சூரியக் கோயில் சிற்பங்கள்.

ஒடிசா மாநிலத்தில் வங்காள விரிகுடாவோரம் கொனார்க் என்னுமிடத்தில் சூரிய தேவனுக்காக கட்டப்பட்ட கோயில் இது. சிவப்பு மணற்களல், கறுப்புக் கிரானைட் கற்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலுக்கு ஐரோப்பிய மாலுமிகள் சூட்டிய பெயர் 'பிளாக் பகோடா' (கறுப்பு கோயில்). பதின்மூன்றாம் நூற்றாண்டில் (பொ.ஊ. 1236–1264) கங்க பேரரசன் நரசிம்மதேவரால் கட்டப்பட்டது. இதைக்கட்டுவதற்கு பேரரசின் 12 ஆண்டு வருமானம் செலவிடப்பட்டதாம்.

இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌர மதத்தில் சூரிய தேவன் தான் முக்கிய கடவுள் ஆவர். அதன் பேரிலேயே சூரிய தேவனுக்காக இந்த கோயில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர்கள், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு பாலியல் விளையாட்டுக்களைக் காட்டும் சிற்பங்களும் உண்டு. சௌர சமயத்தில் சூரிய தேவன் சிருஷ்டி தேவனாக பார்க்க படுகிறார். அந்த அடிப்படையே பாலியல் விளையாட்டுக்களைக் காட்டும் சிற்பங்கள் உருவாக காரணம். கோயிலின் முன்பகுதியில் உள்ள நாத மந்திரம் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. இப்படி நூற்றுக்கணக்கான சிற்பங்கள், கல்லில் நடப்பட்ட கலை நாற்றுக்களாக காட்சி அளித்து கொண்டிருக்கின்றன.

நரசிம்ம தேவனால் கட்டப்பட்ட முழு கோயிலும் இப்போது இல்லை. கோயிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக் கோயிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை கொனார்க் அருங்காட்சியகத்தில் காணலாம்.

இந்தியாவில் சூரிய தேவனுக்காக அமைக்கப்பட்டு எஞ்சி நிற்கும் கோயில் கொனார்க் சூரியக் கோயில் மட்டுமே. சிறப்புக்குரிய இந்தக் கோயிலை யுனெஸ்கோ அமைப்பு 'உலகப் பண்பாட்டுச் சின்னமாக' 1984ம் ஆண்டில் அறிவித்தது. கோயிலை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

கோயிலின் அமைப்பு

 
கொனார்க் சூரியக் கோயிலின் அகலப் பரப்புக் காட்சி

இக்கோயில் சூரியனுடைய தேர் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

விழாக்கள்

கொனார்க்கில் பெப்ரவரி மாதம் நடைபெறும் 'மஹாசப்தமி விழா' பிரசித்தம். சூரிய தேவனை தரிசிக்க லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். திசெம்பர் மாதத்தில் சூரியக் கோயில் முன் நடனத் திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்த வண்ணத் திருவிழா இது.

போக்குவரத்து

புவனேசுவரில் இருந்து 65 கிமீ தொலைவிலும் புரியில் இருந்து 35 கிமீ தொலைவிலும் கொனார்க் அமைந்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து சாலை மார்க்கமாக சென்று விடலாம். புரி, புவனேசுவரில் தொடருந்து நிலையங்கள் உள்ளன. புவனேசுவரில் விமான நிலையம் இருக்கிறது. கொனார்க் அருகில் அழகு சிந்தும் சந்திரபாகா கடற்கரை உள்ளது. இதுவும் அருமையான ஒரு சுற்றுலாத் தலமாகும்.

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

Coordinates: 19°53′15″N 86°05′41″E / 19.887444°N 86.094596°E / 19.887444; 86.094596





  1. "Konark Sun Temple". Archived from the original on 2017-06-01. பார்க்கப்பட்ட நாள் 2017-05-30.