கைலாசவடிவு சிவன்
கைலாசவடிவு சிவன் (Kailasavadivoo Sivan) என்பவர் இந்திய விண்வெளித் துறையின் அறிவியலாளர் ஆவார். விக்ரம் சாராபாய் விண்வெளி நடுவத்தின் இயக்குநராக 2015 ஆம் ஆண்டு சூன் முதல் நாளிலிருந்து பொறுப்பேற்றுள்ளார். பி .எஸ். எல். வி திட்டத்தில் முக்கியப் பணி ஆற்றினார். கடந்த 33 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் சிவனின் பங்களிப்பு இருந்தது. ராக்கட்டின் அமைப்பு தொடர்பாக சித்தாரா என்னும் பெயரில் மென்பொருளை உருவாக்கினார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 2018 சனவரி 12 ஆம் தேதியில் பதவியேற்றார்.[1]
கைலாசவடிவு சிவன் | |
---|---|
கைலாசவடிவு சிவன் | |
பிறப்பு | 1958 (அகவை 65–66) சரக்கல்விளை, கன்னியாகுமரி, மெட்ராஸ் மாநிலம், இந்தியா (இப்போது தமிழ் நாடு, இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இளங்கலை அறிவியல் பட்டம் (கணினி அறிவியல்),மதுரை பல்கலைக்கழகம்,மதுரை.
இளங்கலை பொறியியல் பட்டம் (வான்வெளிப் பொறியியல்), சென்னை தொழில்நுட்ப நிறுவனம், சென்னை, 1980. முதுகலைப் பொறியியல் பட்டம் (வான்வெளிப் பொறியியல்), இந்திய அறிவியல் கழகம், பெங்களூர், 1982. முனைவர் பட்டம் (வான்வெளிப் பொறியியல்), இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை, மும்பை, 2006. |
பணி | இந்திய விண்வெளி ஆய்வு மைய மேலாளர் |
பட்டம் | தலைவர், இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
பதவிக்காலம் | 15 சனவரி 2018 | - 14 சனவரி 2022
வாழ்க்கைத் துணை | மாலதி |
பிள்ளைகள் | சித்தார்த், சிஷாந்த் |
இளமைக் காலம்
சிவனின் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு அண்மையில் உள்ள வல்லங்குமாரவிளை என்னும் சிற்றூர் ஆகும். தமிழ் வழியில்[2] பள்ளிக் கல்வியை கற்ற இவர் கணினியில் இளம் அறிவியல் பட்டமும் பின்னர் சென்னையில் உள்ள எம் ஐ டி யில் ஏரோநாட்டிகல் பொறியியலும் படித்தார். பெங்களுரில் இந்தியன் அறிவியல் நிறுவனத்தில் முதுஅறிவியல் பட்டம் பெற்றார். 2006 ஆம் ஆண்டில் மும்பை இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1982 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதன்முதலாகப் பணியில் சேர்ந்தார்.[3]
விருதுகள்
- ஸ்ரீ ஹரி ஓம் அசிரம் பிரடிட் டாக்டர் விக்ரம் சாரா பாய் ஆய்வு விருது (1999)
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மெரிட் விருது (2007)
- டாக்டர் பிரன் ராய் விண்வெளி அறிவியல் விருது (2011)
- மதிப்புமிகு அலும்னஸ் விருது (எம்.ஐ.தி. அலும்னஸ் கழகம்) (2013)
- சத்தியபாமா பல்கலைக் கழக அறிவியல் முனைவர் விருது (2014)
- ஆனந்த விகடன் "டாப் 10" மனிதர்கள் விருது, 2016)[4]
- அப்துல் கலாம் விருது (தமிழக அரசால் வழங்கப்படும் விருது)[5]
மேற்கோள்கள்
- ↑ http://www.thehindubusinessline.com/news/science/isro-names-sivan-k-as-new-chairman/article10024550.ece
- ↑ "K Sivan: A humble farmer's son's journey to ISRO top job". எக்கனாமிக் டைம்சு. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/a-humble-farmers-sons-journey-to-indian-space-agency-top-job/articleshow/62461608.cms. பார்த்த நாள்: சனவரி 17, 2018.
- ↑ http://tamil.thehindu.com/india/article22416941.ece
- ↑ ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள், அணுக்கம் 04-04-2017
- ↑ "அப்துல்கலாம் விருது இஸ்ரோ தலைவர் சிவனுக்கு மற்றொரு நாளில் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு". தினகரன். 15 ஆகத்து 2019 இம் மூலத்தில் இருந்து 2019-08-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190815124611/http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518271. பார்த்த நாள்: 15 ஆகத்து 2019.