கேப்ரியெலா மிஸ்திரெல்

கேப்ரியெலா மிஸ்திரெல் (Gabriela Mistral, எசுப்பானியம்: [ɡaˈβɾjela misˈt̪ɾal]; 7 ஏப்ரல் 1889 – 10 சனவரி 1957) என்பது சிலி நாட்டு கவிஞரும் கல்வியாளரும் பெண்ணியலாளருமான லூசிலா கோடொய் அல்கயாகாவின் (Lucila Godoy Alcayaga) புனைபெயராகும். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் இலத்தீன் அமெரிக்கரும் முதல் இலத்தீன் அமெரிக்க பெண்மணியும் ஆவார்; 1945ஆம் ஆண்டில் "தமது கவிதை வரிகள் மூலமாக இலத்தீன அமெரிக்க உலகத்தின் எதிர்பார்ப்புகளின் சின்னமாக விளங்கும் " இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. இவரது பாடல்களின் மையக்கருத்தாக இயற்கை, ஏமாற்றம், காதல், அன்னையின் அன்பு, சோகமும் மீட்பும், பயணம், தாயக முதுகுடிகள் மற்றும் ஐரோப்பிய பண்பாட்டுக் கூறுகளாலான , இலத்தீன் அமெரிக்க அடையாளம் ஆகியவற்றை கொண்டிருந்தது. இவரது உருவப்படம் சிலி நாட்டின் 5,000 பெசொ வங்கித்தாளில் அச்சிடப்பட்டுள்ளது.

கேப்ரியெலா மிஸ்திரெல்
Gabriela Mistral 1945.jpg
இயற்பெயர் கேப்ரியெலா மிஸ்திரெல்
பிறப்புபெயர் லூசில்லா டெ மாரியா டெல் பெர்பெச்சுவொ சோகோர்ரொ கோடொய் அல்கயாகா
பிறந்ததிகதி (1889-04-07)ஏப்ரல் 7, 1889
பிறந்தஇடம் விகுனா, சிலி
இறப்பு சனவரி 10, 1957(1957-01-10) (அகவை 67)
பணி கல்வியாளர், பேராளர், கவிஞர்
தேசியம் சிலிக்காரர்
காலம் 1914–1957
குறிப்பிடத்தக்க விருதுகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1945
கையொப்பம் Firma Gabriela Mistral.svg.png

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கேப்ரியெலா_மிஸ்திரெல்&oldid=19516" இருந்து மீள்விக்கப்பட்டது