கேகாலை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது கேகாலை மாவட்டத்தின் தலை நகரமாகும். கொழும்பு - கண்டி பெருந்தெருவில் கொழும்பிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலும், கண்டியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இலங்கையின் காரிய படிவுகள் போகலை சுரங்கம் இந்நகரத்தின் அருகில் காணப்படுகிறது.[1][2][3]

கேகாலை
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
 - நகரம் (2001)
17430 (31)

 - 17430
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 71000
 - +9435
 - SP
கேகாலை
கேகாலை is located in இலங்கை
கேகாலை
கேகாலை
ஆள்கூறுகள்: 7°15′11.16″N 80°21′2.16″E / 7.2531000°N 80.3506000°E / 7.2531000; 80.3506000

புவியியலும் காலநிலையும்

கேகாலை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவப்பெயர்ச்சிக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3125 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 17430 15882 629 153 528 58 180
நகரம் 17430 15882 629 153 528 58 93

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 17430 14926 411 785 981 313 14
நகரம் 17430 14926 411 785 981 313 14

கைத்தொழில்

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெறுகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தென்னை பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

7°15′11.16″N 80°21′2.16″E / 7.2531000°N 80.3506000°E / 7.2531000; 80.3506000


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://tamilar.wiki/index.php?title=கேகாலை&oldid=39067" இருந்து மீள்விக்கப்பட்டது