குழமகன் (பாட்டியல்)

பாட்டியலில் குழமகன் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். உயர்குலப் பெண்களின் கையில் உள்ள ஆண் குழந்தையைக் கண்டு அக் குழந்தையைப் புகழ்ந்து பாடுவதே குழமகன் என்பது பாட்டியல் இலக்கணம்.[1] இது கலிவெண்பாவில் அமையும். குழமகன் என்பது ஆண் குழந்தை என்று பொருள்படும். எனவே ஆண் குழந்தையைப் பாடும் இலக்கியமும் குழமகன் என்னும் பெயரைப் பெற்றது.

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 870

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=குழமகன்_(பாட்டியல்)&oldid=16802" இருந்து மீள்விக்கப்பட்டது