குறம்
குறம் [1] என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்பாகக் 'குறம்' என்னும் உறுப்பு வருவது பண்டைய முறை. இது நாளடைவில் குறவஞ்சி என்னும் தனிவகைச் சிற்றிலக்கியமாக உருப்பெற்றது. குறவஞ்சி என்னும் சிற்றிலக்கியப் பகுதிகளில் குறி சொல்லும் பகுதியை மட்டும் கூறுவதே குறம். இந்தக் குறம் என்னும் பகுதிக்கு மட்டும் தனியொரு சிற்றிலக்கியமாகத் தோன்றியதே குறம் என்னும் சிற்றிலக்கியம். இந்த வகையில் முதலாவதாகத் தோன்றிய நூல் மீனாட்சியம்மை குறம். இந்தச் சிற்றிலக்கியம் தோன்றிய காலம் 17 ஆம் நூற்றாண்டு.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 123.