கீதாஞ்சலி (நடிகை)

கீதாஞ்சலி (1947 - 31 அக்டோபர் 2019) என்பவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி படங்களில் பணியாற்றிய ஓர் இந்திய நடிகை ஆவார்.[2] ஆறு தசாப்தங்களை நெருங்கிய இவரது திரைப்பட வாழ்க்கையில், இவர் பல மொழிகளில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1960 இல் ராணி ரத்னபிரபா என்ற தெலுங்குப் படத்தில் நடனக் கலைஞராக முதன்முதலில் இவர் தோன்றினார். 1961 ஆம் ஆண்டு சீதா ராம கல்யாணம் மூலம் இயக்குனராக அறிமுகமான என். டி. ராமராவ் இவரை கதாநாயகியாக வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தினார். முரளி கிருஷ்ணா (1964), டாக்டர் சக்கரவர்த்தி (1964), இல்லு (1965), சம்பராலா ராம்பாபு (1970), காலம் மாறிந்தி (1972), அப்பாயிகாரு அம்மைகாரு (1973) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் பிரபலமானார். நந்தி விருதுக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கீதாஞ்சலி
பிறப்புமணி[1]
1947 (1947)
காக்கிநாடா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு31 அக்டோபர் 2019(2019-10-31) (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–71–72)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1947–2019
வாழ்க்கைத்
துணை
இராமகிருஷ்ணா[1]
பிள்ளைகள்1

தனிப்பட்ட வாழ்க்கை

லட்சுமிகாந்த்-பியாரேலால் தயாரிப்பில் உருவான பரஸ்மணி (1963) என்ற இந்தித் திரைப்படத்தில் இவர் பணியாற்றினார். இவரது இயற் பெயரான மணி என்பது படத்தின் தலைப்பில் ஏற்கனவே இடம்பெற்றிருந்ததால், படத் தயாரிப்பாளர் இவரது பெயரை கீதாஞ்சலி என்று மாற்றினார்.[2]

கீதாஞ்சலி, நடிகர் ராம கிருஷ்ணாவை 15 ஆகத்து 1974 இல் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, தொடு நீடா (1965), ஹந்தகுலோஸ்துன்னாரு ஜாக்ரத்தா (1966), ராஜயோகம் (1967), ரணபேரி (1968), நேனு நா தேசம் (1973) போன்ற பல படங்களில் நடித்தார்.

இறப்பு

கீதாஞ்சலி 31 அக்டோபர் 2019 அதிகாலை மாரடைப்பால் இறந்தார். ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்தார்.[3]

திரைப்படவியல்

தமிழ்

  1. சாரதா (1962)
  2. தெய்வத்தின் தெய்வம் (1962)
  3. தாயின் மடியில் (1964)
  4. மாயாமணி (1964)
  5. அல்லி (1964)
  6. பணம் படைத்தவன் (1965)
  7. வாழ்க்கைப் படகு (1965)
  8. வீர அபிமன்யு (1965)
  9. ஆசை முகம் (1965) as Kamala
  10. அதே கண்கள் (1967)
  11. நெஞ்சிருக்கும் வரை (1967)
  12. அன்பளிப்பு (1969)
  13. என் அண்ணன் (1970)
  14. அன்னமிட்ட கை (1972)
  15. கங்கா கௌரி (1973)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கீதாஞ்சலி_(நடிகை)&oldid=22574" இருந்து மீள்விக்கப்பட்டது