கருப்பையா வேலாயுதம்
கருப்பையா வேலாயுதம் (Karuppaiah Velayudam, 6 ஏப்ரல் 1950 - 13 அக்டோபர் 2015) இலங்கைத் தொழிற்சங்கத் தலைவரும், அரசியல்வாதியும், முன்னாள் இராசாங்க அமைச்சரும் ஆவார்.[1]
கே, வேலாயுதம் K. Velayudam | |
---|---|
பெருந்தோட்டத் தொழிற்துறை இராசாங்க அமைச்சர் | |
பதவியில் 2015–2015 | |
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2004 | |
பதவியில் 2014–2015 | |
முன்னையவர் | ஹரின் பெர்னாண்டோ |
பதுளை மாவட்டத்துக்கான ஊவா மாகாணசபை உறுப்பினர் | |
பதவியில் 1988–2001 | |
பதவியில் 2004–2014 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 ஏப்ரல் 1950 |
இறப்பு | 13 அக்டோபர் 2015 சென்னை, இந்தியா | (அகவை 65)
தேசியம் | இலங்கை மலையகத் தமிழர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி |
பெற்றோர்(s) | கருப்பையா தேவர், ஆவத்தாள் |
வேலை | தொழிற்சங்கவாதி |
இளமைக் காலம்
வேலாயுதம் கருப்பையா தேவர், ஆவத்தாள் ஆகியோரின் 11 பிள்ளைகளில் ஏழாவதாக உடப்புசல்லாவை கேர்கில்சு தோட்டத்தில் 1950 ஏப்ரல் 6 இல் பிறந்தார்.[2] தந்தை மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியாக இருந்தவர். பதுளை ஊவா கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.[2] தனலெட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரதீபராஜா, உருத்திரதீபன், தினேஷ்குமார், நிமலரூபன் என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர்.[2]
பணி
வேலாயுதம் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் அமைப்பாளராக ஆரம்பித்தார்.[3] இத்தொழிற்சங்கம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது.[4][5] இவர் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பல பதவிகளில் இருந்து பணியாற்றிய பின்னர் 1982 ஆம் ஆண்டில் அச்சங்கத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.[3] 2003 ஆம் ஆண்டில் அதன் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.[3][6] 2005 இல் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் உறுப்பினராக இருந்த தேசிய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.[3] 2008 இல் கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவராக இருந்து பணியாற்றிய பின்னர் அக்டோபர் 2011 இல் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.[3]
வேலாயுதம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 1988 ஊவா மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டார்.[7] பேர்சி சமரவீரவின் இறப்பை அடுத்து 1999 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[8]
2001 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[9] 2004 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[10]
வேலாயுதம் 2004 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11] 2009 மாகாணசபத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12] 2010 நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு கட்சி வேட்பாளர்களில் மூன்றாவதாக வந்து தெரிவாகவில்லை.[13] ஆனாலும், ஹரின் பெர்னாண்டோ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்ததை அடுத்து 2014 ஆகத்து 8 இல் வேலாயுதம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[14][15] 2015 அரசுத் தலைவர் தேர்தலை அடுத்து புதிதாக அமைக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இவர் பெருந்தோட்டத் தொழிற்துறை இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[16][17]
வேலாயுதம் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளராகச் சேர்க்கப்பட்டார்.[18][19] ஆனாலும், தேர்தலுக்குப் பின்னர் இவர் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை.[20][21]
மறைவு
வேலாயுதம், சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2015 அக்டோபர் 13 அன்று காலமானார்.[22]
தேர்தல் வரலாறு
தேர்தல் | மாவட்டம் | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
1988 மாகாணசபை | பதுளை மாவட்டம் | ஐதேக | தெரிவு | |
1993 மாகாணசபை | பதுளை மாவட்டம் | ஐதேக | தெரிவு | |
1999 மாகாணசபை | பதுளை மாவட்டம் | ஐதேக | தெரிவு | |
2001 நாடாளுமன்றம்[9] | பதுளை மாவட்டம் | ஐதேமு | தெரிவு | |
2004 நாடாளுமன்றம்[10] | பதுளை மாவட்டம் | ஐதேமு | தெரிவு செய்யப்படவில்லை | |
2004 மாகாணசபை[11] | பதுளை மாவட்டம் | ஐதேக | தெரிவு | |
2009 மாகாணசபை[12] | பதுளை மாவட்டம் | ஐதேக | தெரிவு | |
2010 நாடாளுமன்றம்[13] | பதுளை மாவட்டம் | ஐதேமு | தெரிவு செய்யப்படவில்லை |
மேற்கோள்கள்
- ↑ "Directory of Members: Karuppaiah Velayudam". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/308.
- ↑ 2.0 2.1 2.2 ஜே. ஜி. ஸ்டீபன் (17 அக்டோபர் 2015). "நிறம் மாறாதவர்". வீரகேசரி: pp. 21.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Mr. K. Velayudam". National Trade Union Federation இம் மூலத்தில் இருந்து 2015-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151217230501/http://ntufsl.org/index.php?option=com_content&view=article&id=81:mr-maenas-dolor&catid=79:&Itemid=435.
- ↑ "Thonda slams Ratnasiri as estate crisis widens". சண்டே டைம்சு. 28 ஏப்ரல் 1996. http://www.sundaytimes.lk/960428/frontm.html.
- ↑ Satyapalan, Franklin R. (31 அக்டோபர் 2012). "Ganeshan challenges supremacy of CWC in plantations". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304063249/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=64957.
- ↑ "Union Leadership". Lanka Jathika Estate Workers Union இம் மூலத்தில் இருந்து 2014-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141213205535/http://www.ljewu.org/leader.php.
- ↑ "Previous Provincial Council". ஊவா மாகாணம். http://www.pcsec.up.gov.lk/index.php?option=com_content&view=article&id=65&Itemid=59&lang=en.
- ↑ "Provincial Elections". சண்டே டைம்சு. 11 ஏப்ரல் 1999. http://www.sundaytimes.lk/990411/news2.html.
- ↑ 9.0 9.1 "General Election 2001 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015155/http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf.
- ↑ 10.0 10.1 "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf.
- ↑ 11.0 11.1 "Results of Provincial Council Elections 2004". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090107101529/http://www.slelections.gov.lk/pdf/2004Provincial.pdf.
- ↑ 12.0 12.1 "Preferences Badulla". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091210031151/http://www.slelections.gov.lk/pdf/PrefBadulla2009.pdf.
- ↑ 13.0 13.1 "Parliamentary General Election - 2010 Badulla Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513042453/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Badulla_pref_GE2010.pdf.
- ↑ "Velayudhan sworn in to replace Harin". த நேசன். 8 ஆகத்து 2014 இம் மூலத்தில் இருந்து 2014-08-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140815021422/http://www.nation.lk/edition/breaking-news/item/32081-velayudhan-sworn-in-to-replace-harin.html.
- ↑ "Velayudhan replaces Harin at parliament". சிலோன் டுடே. 8 ஆகத்து 2014 இம் மூலத்தில் இருந்து 2014-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141213151409/http://www.ceylontoday.lk/16-69927-news-detail-velayudhan-replaces-harin-at-parliament.html.
- ↑ "New Cabinet ministers sworn in". டெய்லி மிரர். 12 சனவரி 2015. http://www.dailymirror.lk/61073/new-cabinet-ministers-sworn-in.
- ↑ "New Cabinet takes oaths". த நேசன். 12 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150118145912/http://www.nation.lk/edition/latest-top-stories/item/37306-new-cabinet-takes-oaths.html.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 List of Persons submitted under Article 99A of the Constitution". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1923/02. 13 July 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jul/1923_02/1923_02%28E%29.pdf. பார்த்த நாள்: 14 அக்டோபர் 2015.
- ↑ "UPFA, UNP national lists announced". டெய்லி மிரர். 13 சூலை 2015. http://www.dailymirror.lk/79387/upfa-unp-national-lists-announced.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTION — 2015 Declaration under Article 99A of the Constitution". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/25. 21 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_25/1928_25%20E.pdf. பார்த்த நாள்: 14 அக்டோபர் 2015.
- ↑ "UNP national list". டெய்லிமிரர். 21 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/84249/unp-national-list-submitted-to-ec.
- ↑ "Former Minister K.Velayutham passes away". டெய்லி நியூசு. 13 அக்டோபர் 2015. http://www.dailynews.lk/?q=local/former-minister-kvelayutham-passes-away. பார்த்த நாள்: 14 அக்டோபர் 2015.