கரண் (நடிகர்)

கரண் (Karan) என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை சிறுவயதிலிருந்தே தொடங்கியவர், இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன மற்றும்குயிலினே தேடி போன்றவை பெரும் வெற்றி பெற்றவை. கமல்ஹாசனின் நம்மவர் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார்.

கரண்
பிறப்புரகு கேசவன்[1]
ஆகத்து 19, 1969 (1969-08-19) (அகவை 55)
தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்மாஸ்டர் ரகு
பணிநடிகர், பிண்ணனிக் குரல் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1975-1983, 1991 - தற்போது

கொக்கி திரைப்படம் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் போன்ற படங்களிலும் கதாநாயகனாக தொடர்ந்தார்.[2]

விருதுகள்

கேரளா மாநில திரைப்பட விருதுகள்:

  • 1974 - சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் - இராஜஹம்சம்
  • 1975 - சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் - பிரயாணம், ஐயப்பன்

திரைப்பட பட்டியல்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
1990 மிதுளா மலையாளம்
1991 நீலகிரி மலையாளம்
தீச்சட்டி கோவிந்தன் தமிழ்
1992 அண்ணாமலை தமிழ்
1994 நம்மவர் ரமேஸ் தமிழ்
1995 தொட்டில் குழந்தை தமிழ்
சந்திரலேகா ஜமால் தமிழ்
1996 கோயமுத்தூர் மாப்ளே மகேசு தமிழ்
கோகுலத்தில் சீதை கரண் தமிழ்
காதல் கோட்டை சிவா தமிழ்
1997 லவ் டுடே பீட்டர் தமிழ்
காலமெல்லாம் காதல் வாழ்க தமிழ்
நேருக்கு நேர் முத்துகுமார சுவாமி தமிழ்
ராமன் அப்துல்லா அப்துல்லா தமிழ்
கடுவா தோமா வீரன் மலையாளம்
காலமெல்லாம் காத்திருப்பேன் ராஜா தமிழ்
காதலி தமிழ்
1998 துள்ளித் திரிந்த காலம் ரகு தமிழ்
கண்களின் வார்த்தைகள் தமிழ்
காதல் மன்னன் ராஜன் தமிழ்
பூ மணம் தமிழ்
கலர் கனவுகள் தமிழ்
கண்ணெதிரே தோன்றினாள் சங்கர் தமிழ்
கண்ணாத்தாள் தமிழ்
சொல்லாமலே தமிழ்
மனம் விரும்புதே உன்னை சந்துரு தமிழ்
காதல் கவிதை தமிழ்
1999 உன்னை தேடி பிரகாஸ் தமிழ்
மறவாதே கண்மணியே தமிழ்
கண்ணுபடப்போகுதய்யா சுப்பிரமணி தமிழ்
பூவெல்லாம் கேட்டுப்பார் தமிழ்
சினேகா கன்னடம்
மின்சார கண்ணா அசோக் தமிழ்
2000 திருநெல்வேலி வீரப்பன் தமிழ்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை தமிழ்
இளையவன் தமிழ்
2001 பார்வை ஒன்றே போதுமே மனோச் தமிழ்
கோட்டை மாரியம்மன் தமிழ்
நாகேஸ்வரி ஈஸ்வர் தமிழ்
எங்களுக்கும் காலம் வரும் தமிழ்
சொன்னால் தான் காதலா இன்பராஜ் தமிழ்
குங்குமப்பொட்டுக்கவுண்டர் தமிழ்
கபடி கபடி தமிழ்
அல்லி அர்ஜூனா கிசோர் தமிழ்
2002 பண்ணாரி அம்மன் வானமலை தமிழ்
2003 நீ வரும் பாதையெல்லாம் தமிழ்
2004 அரசாட்சி பிரகாசு தமிழ்
2006 கொக்கி கொக்கி தமிழ்
2007 கருப்பசாமி குத்தகைதாரர் கருப்பசாமி தமிழ்
தீ நகர் முருகன் தமிழ்
2008 காத்தவராயன் காத்தவராயன் தமிழ்
2009 மலையன் தமிழ்
2010 கனகவேல் காக்க கனகவேல் தமிழ்
இரண்டு முகம் பார்த்தசாரதி தமிழ்
2011 தம்பி வெட்டோத்தி சுந்தரம் சுந்தரம் தமிழ்
2013 கந்தா கந்தா தமிழ்
2014 சூரன் சூரன் தமிழ்
கன்னியும் காளையும் செம காதல் தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கரண்_(நடிகர்)&oldid=21603" இருந்து மீள்விக்கப்பட்டது