கமலி பிரம் நடுக்காவேரி

கமலி ஃப்ரம் நடுக்காவேரி (Kamali from Nadukkaveri) ஒரு 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் இயக்குநர் ராஜசேகர் துரைசாமியின் அறிமுகத் திரைப்படம் ஆகும். [1] இந்த படத்தில் கயல் ஆனந்தி, ரோஹித் சரஃப் மற்றும் பிரதாப் போத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். [2] இந்தத் திரைப்படம் 2021 பிப்ரவரி 19 அன்று திரையரங்குகளில் வெளியானது. பின்னர் நேரடியாக அதிவேக இணைய இணைப்பின் வழியாக தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் முறையில் ஜீ5 என்ற நிறுவனத்தால் 2021 சூலை மாதத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. [3] [4]

கமலி பிரம் நடுக்காவேரி
இயக்கம்ராஜசேகர் துரைசாமி
இசைதீனதயாளன்
நடிப்புகயல் ஆனந்தி
ரோகித் சுரேஷ் சரப்
பிரதாப் போத்தன்
ஒளிப்பதிவுஜெகதீசன் லோகாயன்
கலையகம்அப்புன்டு ஸ்டூடியோஸ்
வெளியீடுபெப்ரவரி 19, 2021 (2021-02-19)
ஓட்டம்159 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைக்களம்

கமலி என்பவர் நடுக்காவேரி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்து வரும் மகிழ்ச்சியான-அதிர்ஷ்டசாலி பெண். இவர் மாநில அரசின் பாடத்திட்டத்தில் தமிழ் வழியாகப் பள்ளியில் பயின்றவர் ஆவார். பின்னர், நடுவண் அரசின் இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளியில் படித்து வெற்றிகரமான மாணவராக வந்து பின்னர் சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பயின்ற அஸ்வினின் பேட்டி ஒன்றை பார்க்கும் வரை இவருக்கு பெரிய கனவென்று ஏதுமில்லை. கமலி இதுவரை நேரில் பார்த்தேயிராத அஸ்வினைக் காதலிக்கத் தொடங்குகிறார். அஸ்வினுடன் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகவே, சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் சேர விரும்புகிறார். கமலியின் பயணம் ஒரு கற்பனை காதல் கதையைப் போலவே தொடங்குகிறது என்றாலும், மெதுவாக, கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டு, தனது கிராமத்தில் உள்ள இளம் மாணவர்களுக்கு ஒரு பெரிய உத்வேகமாக முடிகிறது.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படம் சூலை 2019 இல் எங்கே அந்த வான்? என்ற தலைப்பில் தயாரிப்பு தொடங்கப்பட்டது. [5]

வெளியீடு

இத்திரைப்படம் ஆரம்பத்தில் ஏப்ரல் 17, 2020 அன்று வெளியீட்டிற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.[6] இந்த படம் அதன் திரையரங்க வெளியீட்டை 20 பிப்ரவரி 2021 அன்று 50% இருக்கை வசதியுடன் கொண்டிருந்தது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கமலி_பிரம்_நடுக்காவேரி&oldid=31842" இருந்து மீள்விக்கப்பட்டது