கந்தன் கருணை (திரைப்படம்)
கந்தன் கருணை (Kandan Karunai) 1967 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை ஏ. பி. நாகராஜன் இயக்கினார். சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலர் இத் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
கந்தன் கருணை | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | ஏ. எல். சீனிவாசன் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சிவகுமார் ஜெமினி கணேசன் சாவித்திரி கே. ஆர். விஜயா ஜெ. ஜெயலலிதா |
ஒளிப்பதிவு | கே. எஸ். பிரசாத் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
கலையகம் | ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 1967 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முருகக் கடவுளின் பிறப்பு, அவர் சிறுவனாயிருந்தபோது ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு பழனிமலை சென்றது, சூரபதுமன் வதம், தெய்வயானை மற்றும் வள்ளியுடனான திருமணம் ஆகிய கந்தபுராண நிகழ்வுகளைக் கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்படம் ஆகும்.
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் -வீரபாகு தேவன்
- ஜெமினி கணேசன் -இறைவன் சிவன்
- சாவித்திரி -பார்வதி
- சிவகுமார்-இறைவன் முருகன்
- கே. ஆர். விஜயா -தெய்வானை/தேவநாயகி
- ஜெ. ஜெயலலிதா -வள்ளி/வள்ளிநாயகி
- அசோகன் -சூரபத்மனன்
- மாஸ்டர் ஸ்ரீதர் -குழந்தை முருகன்
- கே. பி. சுந்தராம்பாள் -ஔவையார்
- மனோரமா -வள்ளியின் தோழியாக
- எஸ். வரலட்சுமி -இந்திராணி
- கே. பாலாஜி -பானுகோபன்
- நாகேஷ் -நாகேஸ்வரன்
- சீர்காழி கோவிந்தராஜன் -நக்கீரன்