மாஸ்டர் ஸ்ரீதர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாஸ்டர் ஸ்ரீதர்
Master Sridhar.jpg
பிறப்புஸ்ரீதர்
1953[1]
இறப்பு11 திசம்பர் 2013(2013-12-11) (அகவை 50)[2]
இந்தியா, தமிழ்நாடு, சென்னை
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்மாஸ்டர் ஸ்ரீதர்
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
பேபி இந்திரா[2]
பிள்ளைகள்பிரசாந்த்
ரக்சித் பாலாஜி[3]

மாஸ்டர் ஸ்ரீதர் (Master Sridhar) என்று அழைக்கப்பட்ட ஸ்ரீதர் தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் சுமார் 150 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் தனது குழந்தை கால நடிப்பிற்காக பிரபலமானார்.


திரைப்பட வாழ்க்கை

குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர், கந்தன் கருணை, கர்ணன், சுவாமி அய்யப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஜெமினி கணேசன் மற்றும் கே. ஆர். விஜயா நடித்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நாயகனாகவும் நடித்தார். கந்தன் கருணை என்ற திரைப்படத்தில் முருகப்பெருமானாக நடித்ததன் மூலம் இவர் நன்கு அறியப்பட்டார். 

ஆதி பராசக்தி (ராஜ் தொலைக்காட்சி), ஞானானந்தம் (பொதிகை), இந்திரஜித் (ஜெயா தொலைக் காட்சி) ஆகியவை இவர் நடித்த சில தொடர்களாகும்.

தமிழில் இவர் கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெளியான பகவான் ஐயப்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

குடும்பம்

ஸ்ரீதர் 70களில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்த பேபி இந்திரா என்னும் இந்திராவை மணந்தார். இந்த இணையருக்கு பிரசாந்த் மற்றும் ரக்சித் பாலாஜி என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர் சென்னை கொட்டிவாக்கம் கற்பகாம்பாள் நகரில் தன் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு நீண்ட காலமாக இளைப்பு நோய் இருந்து வந்தது. 11 திசம்பர் 2013 அன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக இறந்தார். [4]

பகுதி படத்தொகுப்பு

ஆண்டு திரைப்படம் மொழி பங்கு குறிப்புகள்
1966 மறக்க முடியுமா தமிழ்
1967 ஸ்ரீ புரந்தர தாசரு கன்னடம்
1964 கர்ணன் தமிழ் மேகநாதன்
1967 கந்தன் கருணை தமிழ் குழந்தை முருகன்
1967 சித்திரமேளா மலையாளம்
1969 பல்லாத்த பகையன் மலையாளம்
1970 நம்ம குழந்தைகள் தமிழ்
1972 குறத்தி மகன் தமிழ்
1974 பணத்துக்காக தமிழ் ரவி
1976 தசாவதாரம் தமிழ் இளவரசன் இலட்சுமணன்
1977 சிநேகம் மலையாளம்
1982 குரோதம் தமிழ் சிவா
1986 நம்பினார் கெடுவதில்லை தமிழ்
1987 முப்பெரும் தேவியர் தமிழ்
1996 வெற்றி விநாயகர் தமிழ் நாரதர்


மேற்கோள்கள்

  1. "Master Sridhar Passed Away". www.kollywoodtoday.net. 12 December 2013. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
  2. 2.0 2.1 "Versatile talent". The Hindu (www.thehindu.com). 12 December 2013. http://www.thehindu.com/features/friday-review/theatre/versatile-talent/article5451454.ece. பார்த்த நாள்: 10 February 2015. 
  3. "Actor Master Sreethar Died..!!". tamilplex.com. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
  4. "நடிகர் "மாஸ்டர் ஸ்ரீதர்" மாரடைப்பால் காலமானார்! - Old actor Master Sridhar Dead". 12 December 2013.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாஸ்டர்_ஸ்ரீதர்&oldid=22024" இருந்து மீள்விக்கப்பட்டது