கண்மணி குணசேகரன்
கண்மணி குணசேகரன் (பிறப்பு: 1971) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார்.[1] 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி”[2] எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
கண்மணி குணசேகரன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கண்மணி குணசேகரன் |
---|---|
பிறந்தஇடம் | பாலக்கொல்லை, விருத்தாசலம் வட்டம், தமிழ் நாடு, இந்தியா |
பணி | நாவலாசிரியர் |
தேசியம் | இந்தியர் |
படைப்புகள்
- அஞ்சலை
- நெடுஞ்சாலை
- கோரை
- வந்தாரங்குடி
- பூரணி பொற்கலை
- ஆதண்டார் கோயில் குதிரை
- தலைமுறைக் கோபம்
- கிக்குலிஞ்சான்
- மூன்றாம் நாள் பெண்
- சமாதானக் கறி
- உயிர்த்தண்ணீர்
- நடுநாட்டுச் சொல்லகராதி
- வெள்ளெருக்கு
- காலிறங்கிப் பெய்யுமொரு கனமழை
- வாடாமல்லொ
- சிற்றகலில் தொற்றிய தீத்துளி
- காட்டின் பாடல்
- மிளிர் கொன்றை
- காலடியில் குவியும் நிழல்வேளை
- உத்திமாக்குளம்