கண்ணம்மா (2005 திரைப்படம்)

கண்ணம்மா (Kannamma) என்பது 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். எஸ். பாபா விக்ரம் இயக்கிய இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் மீனா நடிக்க, பிரேம் குமார், போஸ் வெங்கட் ஆகியோர் பிறபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் லட்சுமி சௌபாக்யவதி என்று பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1] இப்படத்தின் திரைக்கதையை மு. கருணாநிதி எழுதினார்.[2][3]

கண்ணம்மா
இயக்கம்எஸ். எஸ். பாபா விக்ரம்
தயாரிப்புஎஸ். எஸ். பாபா விக்ரம்
திரைக்கதைமு. கருணாநிதி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புமீனா
பிரேம் குமார்
போஸ் வெங்கட்
ஒளிப்பதிவுசி. எம். முத்து
படத்தொகுப்புவிக்ரம் ராஜா
கலையகம்பாபா சினி பிலிம்ஸ்
விநியோகம்பாபா சினி பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 4, 2005 (2005-02-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

கண்ணம்மா ( மீனா ) என்பவள் ஒரு பணக்கார மருத்துவ மாணவி. அவளது ஓட்டுநர் பாபு ( கராத்தே ராஜா ) நடத்தும் அமில வீச்சு தாக்குதலில் இருந்து அவளை ஆனந்தன் (பிரேம் குமார்) காப்பாற்றுகிறான். இதன் பிறகு ஆனந்தனை கண்ணம்மா காதலிக்கிறாள். அதன்பிறகு இருவர் வாழ்விலும் ஏற்படும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதில் இருந்து எவ்வாறு மீண்டனர் என்பதே கதையின் முடிவாகும்.

நடிகர்கள்

நடிகர் பாத்திரம்
மீனா கண்ணம்மா
பிரேம் குமார் ஆனந்தன்
போஸ் வெங்கட் மதன்
விந்தியா மாலா
கராத்தே ராஜா பாபு
வடிவுக்கரசி
வையாபுரி
குயிலி
சந்திரசேகர்

இசை

இப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தார். பாடல்களை ஸ்டார் மியூசிக் வெளியிட்டது.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கைகொடு கைகொடு"  மாதங்கி ஜெகதீஷ், ஸ்ரீநிவாஸ் 4:46
2. "என்னை எத்தனை"  பாப் ஷாலினி, திப்பு 4:33
3. "இளைஞனே இளைஞனே"  மாணிக்க விநாயகம் 3:23
4. "கிச்சு கிச்சு"  அனுராதா ஸ்ரீராம் 3:59
5. "ஆலமரக் கிளையினிலே"  சுவர்ணலதா 5:03
6. "இரவு விழி மழை"  வாணி ஜெயராம் 5:49
மொத்த நீளம்:
27:33

வரவேற்பு

ரெடிஃப் எழுதியது, "2005 ஆம் ஆண்டில், அதாவது இன்றைக்கு திரைப்படங்கள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பது குறித்து இயக்குனர் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவில்லை என்பது படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இந்த படம் 1960 களின் முற்பகுதியில் தயாரிக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கலாம் ".[5] திரைபடம் குறித்து பாலாஜி பி எழுதியது "இது ஒரு அரசியல் நையாண்டி அல்ல, கதாநாயகியின் பெயரை படத்தின் பெயராக வைத்திருந்தாலும், சமூக ரீதியாக பொருத்தமான படம். அவரது [கருணாநிதி] உரையாடல்கள் சில இடங்களில் பிரகாசிக்கின்றன, ஆனால் பெரும்பாலானவை, கொடூரமான திரைக்கதை, மோசமான பாத்திரப் படைப்பால் பொருத்தமற்றுள்ளது. " [6] இண்டியாகிளிட்ஸ் எழுதியது "படம் தேசியம், சாதி, வகுப்புகளிடையே நல்லிணக்கம் பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளது. ஆனால் இது சில பிழைகளினால் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லை. " [7]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கண்ணம்மா_(2005_திரைப்படம்)&oldid=31740" இருந்து மீள்விக்கப்பட்டது