கடியன்லென
கடியன்லென (Kadiyanlena தமிழில் சிலவேளைகளில் கடியஞ்சேனை) இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பத்தனை, நாவலப்பிட்டி பெருந்தெருவில் நாவலப்பிட்டி நகரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நிர்வாகம் பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவாலும்[1] உள்ளூராட்சி பஸ்பாகே கோரளை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் தேயிலைப் பெருந்தோட்டங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். நகரம் கண்டி-நுவரெலியா மாவட்ட எல்லையில் கண்டி பக்கமாக அமைந்துள்ளது. நகருக்கருகில் கெட்டபுலா நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
கடியன்லென | |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 974 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
கடியன்லென | |
---|---|
ஆள்கூறுகள்: 7°1′1.12″N 80°34′58.8″E / 7.0169778°N 80.583000°E |
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 20". பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2024.
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
மாநகரசபைகள் | கண்டி | மாத்தளை | நுவரெலியா | |
நகரசபைகள் | நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன | |
சிறு நகரங்கள் | அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை |