ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில்
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் ஐவர்மலை எனும் ஊரில் அமைந்துள்ள கோயில் ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில். இந்தக் கோயில் திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் பழமையும் பெருமையும் வாய்ந்த கோயில்களில் ஒன்று.
| |
மூலவர்: | திரவுபதி (பாஞ்சாலி ) |
---|---|
தாயார்: | திரவுபதி (பாஞ்சாலி ) |
தல விருட்சம்: | வன்னி, வேம்பு |
துணை தெய்வங்கள் | உச்சி பிள்ளையார், குழந்தை வேலப்பர், இடும்பன் |
தீர்த்தம்: | சூரிய புஷ்கரிணி, சந்திரபுஷ்கரிணி, பால்சுனை |
பழமை | 500-1000 வருடங்களுக்கு முன் |
அமைவிடம்: | ஐவர்மலை பழனி |
வட்டம்,:மாவட்டம் | பழனி, திண்டுக்கல் |
மாநிலம்: | தமிழ்நாடு, இந்தியா |
சங்ககாலம்
ஐயூர் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் ஐயூர் முடவனார். முடம் பட்டிருந்த இந்தப் புலவர் உறையூர் வேந்தன் கிள்ளி வளவனைக் காணச் செல்லும் வழியில் தாமான் தோன்றிக்கோனைக் கண்டார். வளவனிடம் செல்கையில் தன் வண்டியை இழுக்க எருது ஒன்று வேண்டும் எனக் கேட்ட புலவர் ஏறிச்செல்லத் தேர்வண்டியும் அதனை இழுத்துச்செல்ல புலவர் விருப்பப்படி எருது வழங்கியதோடு, ஆனிரை கூட்டத்தையே பரிசிலாக வழங்கினான். [1] ஐவர்மலையிலிருந்து தான்தோன்றிக்கோன் ஆண்ட தான்தோன்றிமலை வழியாக உறையூர் செல்லப் புலவர் திட்டமிட்ட வரிசையை எண்ணும்போது ஐயூர் மலையே ஐவர்மலை என மருவிற்று எனக் கொள்ளுதல் அமையும்.
தல வரலாறு
வன வாசத்தின் போது பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியுடன் ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுவதால் இம்மலை ஐவர் மலை எனப் பெயர்பெற்றதாக கூறுகின்றனர். போகருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.
இந்த தோஷம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார். வேள்வியின் முடிவில் புவனேஸ்வரி அம்மன் தோன்றி இந்த தோஷம் போக வேண்டுமானால் நவபாஷானத்தினால் ஆன முருகன் சிலை ஒன்று செய்து அந்த முருகன் சிலையை பழனியில் வைத்து வழிபடும் படி கூறினாள். போகரும் இந்த பொறுப்பை தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.
தல சிறப்பு
- ஐவர்மலை தலத்தில் சூரியபுஷ்கரிணி,சந்திர புஷ்கரிணிகளின் அமைப்பு சிறப்பானது. சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படியான அமைப்பு. ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைந்து கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக நம்புகிறார்கள். இந்தக் காரணங்களுக்காக ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர்.
- மற்றொரு சிறப்பு உச்சிப்பிள்ளையார் சன்னதியில் ஆடி அமாவாசை அன்று ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.
- ஐவர் மலை தலத்தில் விநாயகர் உச்சிப்பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
- பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் துவாபரயுகத்தில் இங்கு வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.
தலபெருமை
- போகர் பழனி மலைகோவிலில் உள்ள முருகனை இந்த மலையில் தங்கியிருந்து உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் எந்த ஆதாரமுமில்லை. ஐவர்மலை பழனிக்கு தாய் வீடு என்கிறார்கள்.
- நாராயணபரதேசி என்ற பரதேசி சுமார் 150 வருடங்களுக்கு முன் ஐவர்மலைக்கு வந்தார். கொற்றவை விக்ரகத்துடன் கோயில் ஒன்றை கட்டுகிறார். நாராயணபரதேசி மட்டும் இங்கே முக்தியடைந்துள்ளார்கள். மற்றும் அவர் சீடர் பத்மநாபா களஞ்சிகாட்டில் முக்தியடைந்துள்ளார்கள்.
- பெரியசாமி என்பவர் இம்மலையில் பலருக்கு தியானம், யோகா, போன்றவற்றை கற்பித்து பின் இங்கேயே முக்தியடைந்துள்ளார். இங்கு பெரியசாமிக்கு சிலையும் அவரது சமாதி மேல் கோயிலும் அமைந்துள்ளது. பெரியசாமியின் ஒரே சீடர் பெருமாள்சாமி குடும்பத்துடன் ஐவர் மலையில் வசிக்கிறார்.
- இப்போது இம்மலையில் யோகா, தியானம் ஆகியவற்றை யாரும் சொல்லித் தரவில்லை. தற்போது இங்கு சாந்தலிங்கம் என்ற இளந்துறவியும் பயனர் யோகிசிவம் ஆக இருவர் மட்டும் உள்ளனர்.
- இம்மலையின் மேற்கு பகுதியில் உள்ள சம தளத்தில் குழந்தைவேலப்பர் கோவிலில் மற்றுமொரு சிறப்பு நவக்கிரகங்கள் வட்டவடிவில் ஒன்றை ஒன்று பார்க்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது.
- கூன் பாண்டியன் காலத்தில் துரத்தியரடியடிக்கப்பட்ட சமண முனிவர்கள் தப்பித்து இங்கு வந்து தங்கி வாழ்ந்துள்ளார்கள். இதனை இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
- இடும்பன் சன்னதி பழனியைப்போலவே இங்கும் சிறப்பு.
- ஐவர்மலைக்கு வந்து வழிபட்டால் பஞ்ச பூத தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள்.
- யோக நிலையில் துரியம் என்பது மனம் புலன்களுடன் பொருந்தும் நிலையை குறிப்பதாகும். இதனை யோக சாதகம் செய்பவர்கள் உணரும் வண்ணம் இந்த மலையின் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
உச்சிப்பிள்ளையார் சன்னதியில் விளங்கும் பஞ்சபூத அமைப்பு
நீர்-சூரியசந்திர புஷ்கரிணி தீர்த்தம்,
நிலம்- மலை (மலையே நிலத்தில் தான் அமைந்துள்ளது).
நெருப்பு -ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம்
காற்று - இங்கு எப்படிப்பட்ட காற்றுக்கும் தீபம் ஆடாது அணையாது.
ஆகாயம் - மலைக்கு மேல் பரந்து விரிந்த ஆகாயம்.
பஞ்ச பூதங்களும் ஒன்று கூடும் ஆடி அமாவாசை வழிபாடு பஞ்சபூத தலங்களுக்கு போய் வந்த பலன் தரவல்லது.
கோயிலை அடைதல்
- அருகிலுள்ள ரயில் நிலையம்: பழநி
- அருகிலுள்ள விமான நிலையம்: மதுரை
- தங்கும் வசதி: பழநி
ஆதாரங்கள்
- ↑ புறநானூறு 399
வெளி இணைப்பு
PAANCHALI TEMPLE, AIVARMALAI, DINDUKKAL DISTRICT பரணிடப்பட்டது 2011-09-19 at the வந்தவழி இயந்திரம்