ஏ. ரகுநாதன்
ஏ. ரகுநாதன் (மே 5, 1935 - ஏப்ரல் 22, 2020) ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர். மேடை நாடகம், திரைப்படம், வானொலி, குறுந்திரைப்படங்கள் என்று பல்வேறு தளங்களில் செயற்பட்டு வந்தவர். கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் மாணவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தவர். பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி, கனடா, இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி அங்கெல்லாம் வாழும் தமிழ்க் கலைஞர்கள் பங்குபற்றும் பிரமாண்டமான தொலைக்காட்சித் தொடர் ஒன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஏ. ரகுநாதன் |
---|---|
பிறந்ததிகதி | 5 மே 1935 |
பிறந்தஇடம் | மலேசியா |
இறப்பு | ஏப்ரல் 22, 2020 | (அகவை 84)
அறியப்படுவது | நாடக நடிகர், திரைப்பட நடிகர் |
வாழ்க்கைக் குறிப்பு
ஏ. இரகுநாதன் மலேசியாவில் பிறந்தார். யாழ்ப்பாணம் நவாலியில் வாழ்ந்து வந்த இவர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். 1947ம் ஆண்டு தனது முதலாவது நாடகத்தில் நடித்தார். கலையரசு சொர்ணலிங்கத்திடம் நாடகக்கலையை பயின்றார்.[1] தேரோட்டி மகன் என்ற நாடகம் இவருக்குப் பெரும் புகழ் ஈட்டிக்கொடுத்தது.[2] கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார்.[1]
1966 ஆம் ஆண்டில் வெளிவந்த கடமையின் எல்லை திரைப்படத்தில் அருள்நேசன் என்ற பாத்திரத்தில் தோன்றி முதன் முதலாக நடித்தார்.[1] 1968 இல் நிர்மலா என்ற திரைப்படத்தைத் தயாரித்து நடித்தார். தெய்வம் தந்த வீடு திரைப்படத்தில் நாதசுவர மேதை வேணுகோபாலனாக நடித்தார்.[1]
நடித்த திரைப்படங்கள்
புகழ் பெற்ற மேடை நாடகங்கள்
- தேரோட்டி மகன்
- ரகுபதி ராகவ ராஜாராம்
- சாணக்கியன்
- வேதாளம் சொன்ன கதை
குறுந் திரைப்படங்கள்
- பராவின் பேரன் பேர்த்தி
விருதுகள்
- 2016-இல் பிரான்சில் நடைபெற்ற ஐபிசி தமிழா நிகழ்ச்சியில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.[2]
மறைவு
நீண்ட காலமாகச் சுகவீனமுற்றிருந்த இவர் கொரோனாவைரசுத் தொற்றுக்கு உள்ளாகி பிரான்சில் மருத்துவமனையில் காலமானார்.[2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 தம்பிஐயா தேவதாஸ் (2001). இலங்கைத் திரையுலக முன்னோடிகள். சென்னை: காந்தளகம். பக். 211-216.
- ↑ 2.0 2.1 2.2 ஈழத்தின் மூத்தகலைஞர் ரகுநாதன் மறைந்தார்![தொடர்பிழந்த இணைப்பு], ஐபிசி தமிழ், ஏப்ரல் 23, 2020