முல்லை அமுதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முல்லை அமுதன்
Mullaiamuthan.jpg
முழுப்பெயர் இரத்தினசபாபதி
மகேந்திரன்
பிறப்பு கல்வியங்காடு
தேசியம் இலங்கைத் தமிழர்
ஐக்கிய இராச்சியம்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
வலைத்தளம் [Mullaiamuthan]

முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன்) (யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இலங்கை) பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் காற்றுவெளி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

எழுத்துலக வாழ்வு

1980 களில் எழுதத் தொடங்கினார். 1981இல் இவரது முதல் நூலான நித்திய கல்யாணி கவிதை நூல் வெளியானது. இது வரை 12 நூல்கள் வெளியிட்டுள்ளார். ஈழத்து நூல்களை சேகரிப்பதுடன், தொடர்ச்சியாக நூல்கண்காட்சிகளை நடாத்தி, அவற்றை ஆவணப்படுத்தி வரும் இவரால் 10,000 க்கும் அதிகமான நூல்கள், சஞ்சிகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மறைந்த எழுத்தாளர்களின் புகைப்படங்களையும், நினைவுமலர்களையும் சேகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

வெளிவந்த நூல்கள்

  • நித்திய கல்யாணி (1981)
  • புதிய அடிமைகள் (1983)
  • விடியத்துடிக்கும் ராத்திரிகள் (1984)
  • யுத்தகாண்டம் (1989)
  • விழுதுகள் மண்ணைத் தொடும் (1993)
  • ஆத்மா (1994)
  • விமோசனம் நாளை (1995)
  • ஸ்நேகம் (1998)
  • பட்டங்கள் சுமக்கிறான் (1999)
  • முடிந்த கதை தொடர்வதில்லை (1999)
  • யாகம் (2000)
  • இசைக்குள் அடங்காத பாடல்கள் (2002)

பதிப்பித்த நூல்கள்

  • இலக்கியப்பூக்கள் (2008)
  • தாமரைதீவானின் மொழிநூறு
  • சுதந்திரன் கவிதைகள்

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=முல்லை_அமுதன்&oldid=2784" இருந்து மீள்விக்கப்பட்டது