ஏ. எல். அப்துல் மஜீத்
ஏ. எல். அப்துல் மஜீத் (நவம்பர் 15, 1933 - நவம்பர் 13, 1987) கிழக்கிலங்கையின் அரசியல்வாதியும், முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஏ. எல். அப்துல் மஜீத் | |
---|---|
பதவியில் 1960–1977 | |
நாடாளுமன்ற உறுப்பினர் for மூதூர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 15, 1932 |
இறப்பு | நவம்பர் 14, 1987 | (அகவை 54)
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
பிள்ளைகள் | நஜீப் அப்துல் மஜீத் |
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, சென்னை |
வாழ்க்கைச் சுருக்கம்
அப்துல் மஜீத் திருகோணமலை மாவட்டம், மூதூரில் முகமது சுல்தான் அப்துல் லத்தீப் விதானையாருக்கு மகனாகப் பிறந்தவர் மஜீத். தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் பெற்றார். பின்னர் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் கற்றார். உயர்ப்படிப்புக்காக இந்தியா சென்று திருச்சி ஜமால் கல்லூரி, பூனா வாதியா கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரிகளில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக நாடு திரும்பினார். கிண்ணியா மத்திய கல்லூரியில் குறுகிய காலம் பதில் அதிபராகப் பணியாற்றினார்[1].
அரசியலில்
மார்ச் 1960 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூதூர் இரட்டை அங்கத்தவர் தொகுதியில் தையல் இயந்திரச் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வி கண்டார். அதே ஆண்டு சூலை மாதம் நடந்த பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார். அன்றில் இருந்து 1977 வரை மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இக்காலத்தில் அவர் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைப் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியிருந்தார்[1].
சுட்டுக் கொலை
அப்துல் மஜீத் 1987, நவம்பர் 13 ஆம் நாளன்று இனந்தெரியாதோரால் மூதூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்[1]. இவரது மகன் நஜீப் அப்துல் மஜீத் திருகோணமலைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக இருந்தவர்.[2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 தடங்கள் (மர்ஹும் ஏ. எல். அப்துல் மஜீது நினைவிதழ்)[தொடர்பிழந்த இணைப்பு], 2002
- ↑ கிழக்கு மக்களின் விடிவுக்காக தன்னையே அர்ப்பணித்த மூதூர் முதல்வர் அப்துல் மஜீத் பரணிடப்பட்டது 2012-11-14 at the வந்தவழி இயந்திரம், தினகரன், நவம்பர் 11, 2012