எஸ். வி. இரமணன்

எஸ். வி. ரமணன், (SV Ramanan) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். இவர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கே. சுப்பிரமணியம்-மீனாட்சி தம்பதியரின் மகனும், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் உடன் பிறந்தவரும் ஆவார். இவரது சிற்றனை திரைப்பட நாயகி எஸ். டி. சுப்புலட்சுமி ஆவார். இசையமைப்பாளர் அனிருத் இரமணனின் பேரன் ஆவார்/[1]

எஸ். வி. இரமணன்
SV Ramanan
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர்
அறியப்படுவதுதிரைப்பட இசையமைப்பாளர்
சமயம்இந்து
பெற்றோர்கே. சுப்பிரமணியம்-மீனாட்சி (சிற்றனை எஸ். டி. சுப்புலட்சுமி)
உறவினர்கள்பத்மா சுப்ரமணியம் (சகோதரி)

மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ். வி. இரமணன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நாடகங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பான விளம்பர படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். 1983-ல் ஒய். ஜி. மகேந்திரன், சுஹாசினி நடிப்பில் வெளியான உருவங்கள் மாறலாம் எனும் திரைப்படத்தை இயக்கி, இசை அமைத்துள்ளார். 1966-ல் ஜெயகாந்தன் திரைக்கதை, இயக்கத்தில் வெளியான யாருக்காக அழுதான் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[2][3]

மறைவு

சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டில், இரமணன் தமது 87-வது அகவையில் உடல்நலக் குறைவால் மறைந்தார்.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._வி._இரமணன்&oldid=20727" இருந்து மீள்விக்கப்பட்டது