எல். ஐ. சி. நரசிம்மன்
எல். ஐ. சி. நரசிம்மன் (L. I. C. Narasimhan, இறப்பு: அக்டோபர் 27, 2011, அகவை 71) தமிழகத் திரைப்பட நடிகர்.
எல். ஐ. சி. நரசிம்மன் | |
---|---|
பிறப்பு | நரசிம்மன் 1940 |
இறப்பு | 27 அக்டோபர் 2011[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 71)
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர் |
எல்.ஐ.சியில் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் திரைப்பட, நாடக ஆசையால் விருப்ப ஓய்வு பெற்று நடிக்க வந்தார். நாடகத்துறையில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்த நரசிம்மன் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். எஸ். பி. முத்துராமன் இயக்கிய படங்கள் அனைத்திலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நரசிம்மன் நடித்து வந்தார்.
மறைவு
நரசிம்மன் சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு 2011 அக்டோபர் 27 இரவு 11:30 அளவில் சென்னையில் காலமானார். சின்மயா நகர் நெற்குன்றத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த இவரின் மனைவி பெயர் நளினி. சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர்.
நடித்த சில படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|---|
1972 | ஆசிர்வாதம் | தமிழ் | ||
1975 | அந்தரங்கம் | தமிழ் | சாராய வியாபாரி | |
1979 | ஆறிலிருந்து அறுபது வரை | தமிழ் | ரஜினிகாந்த் சகோதரன் | |
1983 | துடிக்கும் கரங்கள் | தமிழ் | மருத்துவர் | |
1983 | அடுத்த வாரிசு | தமிழ் | சுந்தரம் | |
1988 | புதிய வானம் (திரைப்படம்) | தமிழ் | சாமுவேல் | |
1988 | குரு சிஷ்யன் | தமிழ் | டிஜிபி சிறீ ராம் மற்றும் பாபுவின் தந்தை | |
1990 | புது வசந்தம் | தமிழ் | ||
1990 | புதுப்பாடகன் | தமிழ் | ||
1990 | எதிர்காற்று | தமிழ் | ||
1991 | கிழக்கு கரை | தமிழ் | ||
1992 | டிராவிட் அங்கில் | தமிழ் | ||
1993 | தங்கக்கிளி | தமிழ் | ||
1995 | சக்ரவர்த்தி | தமிழ் | பிரதீப் | |
1996 | ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே | தமிழ் | டாக்டர். மாறி | |
1998 | தர்மா | தமிழ் | ||
1999 | நினைவிருக்கும் வரை | தமிழ் | ||
2002 | தயா | தமிழ் | ||
2003 | ரமச்சந்திரா | தமிழ் | நீதிபதி |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- காலமானார் நடிகர் நரசிம்மன்[தொடர்பிழந்த இணைப்பு], தினமணி, அக்டோபர் 29, 2011