எட்டியாந்தோட்டை
எட்டியாந்தோட்டை (Yatiyanthota, சிங்களம்: යටියන්තොට இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது அவிசாவளை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் கினிகத்தனை நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் கரவனல்லைக்கும் கித்துள்கலைக்கும் இடையே அமைந்துள்ளது. இது, களனி கங்கையின் கரையில் இலங்கையின் மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவில் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
எட்டியாந்தோட்டை நகரில் 2012 கணக்கெடுப்பின் படி 2,948 பேர் வசிக்கின்றனர், இவர்களில் 1548 பேர் பெண்களும், 1400 பேர் ஆண்களும் ஆவர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "எட்டியாந்தோட்டை புள்ளிவிபரங்கள்". எட்டியாந்தோட்டை பிரதேச சபை. http://www.yatiyantota.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=45&Itemid=57&lang=en. பார்த்த நாள்: 20 பெப்ரவரி 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
மாநகரசபைகள் | இரத்தினபுரி | |
நகரசபைகள் | பலாங்கொடை | கேகாலை | |
சிறு நகரங்கள் | அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை |