எஜமான்
எஜமான், 1993-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், நம்பியார், மனோரமா, நெப்போலியன் உள்ளிட்டோர் துணைப்பாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.
எஜமான் | |
---|---|
எஜமான் | |
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
கதை | ஆர். வி. உதயகுமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் மீனா கவுண்டமணி விஜயகுமார் செந்தில் நெப்போலியன் எம். என். நம்பியார் மனோரமா |
வெளியீடு | 18 பிப்ரவரி 1993 |
ஓட்டம் | 153 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | $3 மில்லியன் |
கதைக்கரு
வானவராயன் (ரஜினிகாந்த்) ஊருக்கு எஜமான் (ஊர்த்தலைவர்), மக்களின் அன்பைப் பெற்றவர். தன்னுடைய தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருடைய ஆலோசனைப்படி, ஊர்மக்கள் பொதுத்தேர்தலைப் புறக்கணிக்கின்றனர், அதனால் இவருடைய பங்காளியான வல்லவராயனின் (நெப்போலியன்) பகையைப் பெறுகிறார். வானவராயன், இருவருக்கும் முறைப்பெண் ஆன வைதீஸ்வரியை (மீனா) மணப்பதால் இப்பகை மேலும் வலுப்பெறுகிறது. இதன் காரணமாக வைதீஸ்வரிக்கு நச்சு கலந்து கொடுக்க, அவருடைய கருப்பை பாதிப்புக்குள்ளாகி மலட்டுத்தன்மை உருவாகின்றது.
வானவராயனை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறி நடிக்கும் வைதீஸ்வரி, ஒரு கட்டத்திற்குமேல் நஞ்சு உண்டு தற்கொலை செய்து கொள்கிறார். இறக்கும்போது பொன்னியை (ஐஸ்வர்யா) திருமணம் செய்துகொள்ளுமாறு வாக்குறுதி வாங்கிக்கொண்டு உயிரிழக்கிறார். அதன்பிறகு வல்லவராயனை எவ்வாறு எதிர்கொள்கிறார், மக்களின் மனதில் திரும்பவும் எஜமானனாக எவ்வாறு திகழ்கிறார் என்பதை காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர்.
வானவராயன் பொன்னியை மணந்து கொள்வது போலவும், அவர்களுக்கு பிறக்கும் மகளுக்கு வைதீஸ்வரி என்று பெயர் வைப்பதாகவும், டிவிடி குறுந்தட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]
நடிப்பு
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
ரஜினிகாந்த் | வானவராயன் |
மீனா | வைதீஸ்வரி |
ஐஸ்வர்யா | பொன்னி |
நெப்போலியன் | வல்லவராயன் |
எம். என். நம்பியார் | வானவராயனின் தாத்தா |
மனோரமா | வானவராயனின் பாட்டி |
கவுண்டமணி | வானவராயனின் ஊழியர் |
செந்தில் | வைதீஸ்வரியின் ஊழியர் |
விஜயகுமார் | வைதீஸ்வரியின் தந்தை |
எஸ். என். லட்சுமி |
பாடல்கள்
பாடல் | பாடியவர்(கள்) |
---|---|
ஆலப்போல் வேலப்போல் | எஸ். பி. பாலசுப்ரமணியம், சித்ரா |
அடி ராக்குமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் |
எஜமான் காலடி | மலேசியா வாசுதேவன் |
இடியே ஆனாலும் | மலேசியா வாசுதேவன் |
நிலவே முகம் காட்டு | எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி |
ஒரு நாளும் | எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி |
தூக்குச்சட்டியே | மலேசியா வாசுதேவன் |
உரக்க கத்துது கோழி | எஸ். ஜானகி |
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ எஜமான் குறித்து மூன்றாம் பத்தி பார்க்க