உள்ளத்தை அள்ளித்தா

உள்ளத்தை அள்ளித்தா (Ullathai Allitha) என்பது 1996 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். சுந்தர் சி. இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிறப்பான வெற்றித் திரைப்படமான இப்படம் சிற்பி இசையமைப்பில் பழனி பாரதி பாடல்களை எழுதினார்.[1]

உள்ளத்தை அள்ளித்தா
Ullathai Allitha
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சுந்தர் சி.
தயாரிப்புஎன். பிரபாவதி
என். சோதிலட்சுமி
என். விஷ்ணுராம்
என். ரகுராம்
திரைக்கதைசுந்தர் சி.
வசனம்கே. செல்வபாரதி
இசைசிற்பி
நடிப்பு
ஒளிப்பதிவுயு. கே. செந்தில்குமார்
படத்தொகுப்புபி. எஸ். வாசு
கலையகம்கங்கா கௌரி புரொடக்சன்சு
விநியோகம்கங்கா கௌரி புரொடக்சன்சு
வெளியீடுசனவரி 15, 1996 (1996-01-15)
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

இப்படம் சபாஷ் மீனா மற்றும் இந்தி மொழியில் வந்த 'அந்தாஸ் அப்னா அப்னா' போன்ற திரைப்படங்களைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.

நடிகர்கள்

  • கார்த்திக் - ராஜாவாக [2]
  • ரம்பா - இந்து[3]
  • கவுண்டமணி - வாசுவாக
  • மணிவண்ணன்- விஸ்வநாதன் மற்றும் காசிநாதனாக
  • ஜெய்கணேஷ் - சந்திரசேகராக
  • செந்தில் -விஸ்வநாதனின் மேலாளராக[4]
  • பாண்டு விஸ்வநாதனின் மேலாளராக
  • ஜோதி மீனா-மீனாவாக
  • கசான் கான்- ஷங்கர்
  • விச்சு விஸ்வநாத்- சந்திரசேகரின் மேலாளராக
  • கே.செல்வ பாரதி
  • கருப்பு சுப்பையா- சேத்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உள்ளத்தை_அள்ளித்தா&oldid=31066" இருந்து மீள்விக்கப்பட்டது