உலகம் சுற்றும் வாலிபன்

உலகம் சுற்றும் வாலிபன் (Ulagam Sutrum Valiban) 1973ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். எம். ஜி. ஆர், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[1]

உலகம் சுற்றும் வாலிபன்
இயக்கம்எம்.ஜி.ஆர்
தயாரிப்புஎம்.ஜி.ஆர் மற்றம் ஆர். எம். வீரப்பன்
கதைசொர்ணம்
இசைம. சு. விசுவநாதன்
நடிப்புஎம்.ஜி.ஆர்
மஞ்சுளா
லதா
சந்திரலேகா
மெட்டா ரூன்கிரேட் (தாய் நடிகை)
எம். என். நம்பியார்
இரா. சு. மனோகர்
எஸ். ஏ. அசோகன்
நாகேஷ்
ஒளிப்பதிவுவி. ராமமூர்த்தி
படத்தொகுப்புஎம். உமாநாத்
கலையகம்எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட்
விநியோகம்எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட்
வெளியீடு11 மே 1973
ஓட்டம்178 நிமிடங்கள்
நீளம்4305 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்4.2 கோடி

அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த திமுக, சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படம் ம. சு. விசுவநாதன் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 அவள் ஒரு நவரச எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 03:32
2 பன்சாயி (பத்தாயிரம் ஆண்டுகள்) டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி வாலி 04:44
3 லில்லி மலர்களுக்கு டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 05:20
4 நிலவு ஒரு பெண்ணாகி டி. எம். சௌந்தரராஜன் வாலி 04:22
5 ஓ மை டார்லிங் (ஆல்பத்தில்) டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:03
6 பச்சைக்கிளி முத்துச்சரம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 04:37
7 சிரித்து வாழ வேண்டும் டி. எம். சௌந்தரராஜன், சோரஸ் புலமைப்பித்தன் 04:29
8 தங்கத் தோணியிலே கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா வாலி 03:24
9 உலகம் உலகம் டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி கண்ணதாசன் 03:39
10 வெற்றியை நாளை சீர்காழி கோவிந்தராஜன் புலவர் வேதா 02:57

கருத்து சுதந்திரம்

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவரும் காலத்தில் எம்.ஜி.ஆர் திமுகவினை விட்டு விலகி, அதிமுக என்ற புதுக் கட்சியை தொடங்கியிருந்தார். அதனால் ஆளும் கட்சியாக இருந்த திமுக தரப்பு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவருவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டது. திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பிரதானமாக சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் மீதான வரியை தமிழக அரசு ஏற்றியது. நிதி நெருக்கடி காரணமாக சுவரொட்டிகள் விளம்பரத்தினை எம்.ஜி.ஆர் தவிர்த்தார்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உலகம்_சுற்றும்_வாலிபன்&oldid=31047" இருந்து மீள்விக்கப்பட்டது