உத்தமபாளையம் வட்டம்

உத்தமபாளையம் வட்டம் , தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக உத்தமபாளையம் நகரம் உள்ளது. இவ்வட்டம் கம்பம், சின்னமனூர் மற்றும் கூடலூர் என மூன்று நகராட்சிகள் கொண்டது.

இந்த வட்டத்தின் கீழ் சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், மார்க்கையன்கோட்டை, எரசக்கநாயக்கனூர் என 6 உள்வட்டங்களும், 39 வருவாய் கிராமங்களும் உள்ளது. அவைகள்:

1.க.புதுப்பட்டி

2.சின்னமனூர்

3.சின்னஓவுலாபுரம் ஊராட்சி

4.கம்பம்

5.எரசக்கநாயக்கனூர் ஊராட்சி

6.எரசக்கநாயக்கனூர் மலைகள்

7.அனுமந்தன்பட்டி

8.காமயக்கவுண்டன்பட்டி

9.கன்னிசேர்வைபட்டி ஊராட்சி

10.கருகட்டான் குளம்,சின்னமனூர்

11.கீழக்கூடலூர்(கிழக்கு)

12.கீழக்கூடலூர்(மேற்கு)

13.கோகிலாபுரம் ஊராட்சி

14.கோம்பை(கிழக்கு)

15.கோம்பை(மேற்கு)

16.குச்சனூர்

17.மல்லிங்காபுரம்

18.மார்க்கையன்கோட்டை

19.மேலக்கூடலூர்(வடக்கு)

20.மேலக்கூடலூர்(மேற்கு)

21.முத்துலாபுரம்

22.நாராயணத்தேவன்பட்டி(தெற்கு)

23.நாராயணத்தேவன்பட்டி(வடக்கு)

24.ஓடைப்பட்டி பேரூராட்சி

25.பண்ணைப்புரம்

26.பூலாநந்தபுரம் ஊராட்சி

27.பொட்டிபுரம்

28.புலிகுத்தி ஊராட்சி

29.இராயப்பன்பட்டி ஊராட்சி

30. சங்கராபுரம்

31.சீப்பாலக்கோட்டை ஊராட்சி

32.டி. மீனாட்சிபுரம் ஊராட்சி

33.தேவாரம் (தேனி)

34.தேவாரம் மலை

35.உத்தமபாளையம்(வடக்கு)

36.உத்தமபாளையம்(தெற்கு)

37.உத்தபுரம்(கம்பம்)

38.வேப்பம்பட்டி

39. அழகாபுரி

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 1,18,381 வீடுகளும், 4,35,069 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 2,17,142 ஆண்களும், 2,17,927 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.9% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 39512 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 932 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 72,449 மற்றும் 300 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 87.3%, இசுலாமியர்கள் 7.02%, கிறித்தவர்கள் 5.4%% & பிறர் 0.27% ஆகவுள்ளனர். [2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உத்தமபாளையம்_வட்டம்&oldid=128984" இருந்து மீள்விக்கப்பட்டது