இவன் வேற மாதிரி
இவன் வேற மாதிரி, டிசம்பர் 13, 2013ல் வெளிவந்த[1] இந்தியத் தமிழ்த் திரைப்படம்[2]. இதனை எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய எம். சரவணன் இயக்கினார். விக்ரம் பிரபு, சுரபி, வம்சி கிருஷ்ணா, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்திருந்தனர். யூடிவி மோசன் பிக்சர்ஸ், திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியாவுடன் இணைந்து தயாரித்திருந்தனர்.
இவன் வேற மாதிரி | |
---|---|
இவன் வேற மாதிரி | |
இயக்கம் | எம். சரவணன் |
தயாரிப்பு | என். சுபாஷ் சந்திரபோஸ் என். லிங்குசாமி ரோன்னி ஸ்குருவாலா சித்தார்த் கபூர் |
கதை | எம். சரவணன் |
இசை | சி. சத்யா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சக்தி |
படத்தொகுப்பு | ஏ. ஸ்ரீகர் பிரசாத் |
கலையகம் | திருப்பதி பிரதர்ஸ் யூடிவி மோசன் பிக்சர்ஸ் |
விநியோகம் | சன் பிக்சர்ஸ் |
வெளியீடு | டிசம்பர் 13, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
சட்டக் கல்லூரி சிக்கலில் படம் ஆரம்பிக்கிறது. இந்த சிக்கலுக்குக் காரணமானவர் சட்ட அமைச்சர். சிறையில் இருக்கும் சட்ட அமைச்சரின் தம்பியான வம்சி ஒரு அரசியல் கொலை செய்ய நன்னடத்தையின் காரணமாக 15 நாட்கள் வெளியில் வருகிறார். அவரை விக்ரம் பிரபு கடத்தி யாரும் இல்லாத இடத்தில் அடைத்துவிடுகிறார். சிறைக்கு செல்ல வேண்டிய கெடு முடிகிறது. சிக்கல் பெரிதாக உருவெடுக்க, சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டியதாகிறது. கடத்தி வைத்திருக்கும் தம்பியை விக்ரம் பிரபு விடுவிக்க, விக்ரம் பிரபுவை வம்சி பழிதீர்த்தாரா என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.
நடிப்பு
- விக்ரம் பிரபு (குணசேகரன் ஆக)
- கணேஷ் வெங்கட்ராமன் (அரவிந்தன் ஐபிஎஸ் ஆக)
- வம்சி கிருஷ்ணா
- சுரபி
மேற்கோள்கள்
- ↑ http://www.sify.com/movies/ivan-veramathiri-gets-u-opens-on-dec-13-news-tamil-nlwjxmbggbd.html
- ↑ "இவன் வேற மாதிரி முன் விமர்சனம்". TamilNews24x7 இம் மூலத்தில் இருந்து 2013-12-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131204011230/http://tamilnews24x7.info/?p=3968. பார்த்த நாள்: 2013-11-30.
வார்ப்புரு:லிங்குசாமி இயக்கியுள்ள திரைப்படங்கள் வார்ப்புரு:எம். சரவணன்