இவனுக்கு தண்ணில கண்டம்
இவனுக்கு தண்ணில கண்டம் (Ivanuku Thannila Gandam) என்பது மார்ச் 2015 13 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] இதனை எஸ். என். சக்திவேல் இயக்கியுள்ளார். வி. வெங்கட்ராஜ் தயாரித்தார்.[3]
இவனுக்கு தண்ணில கண்டம் | |
---|---|
இயக்கம் | எஸ். என். சக்திவேல் |
தயாரிப்பு | வி. வெங்கட்ராஜ் |
கதை | எஸ். என். சக்திவேல் |
இசை | A7 |
நடிப்பு | தீபக் தின்கர் நேகா ரத்னாகரன் இராஜேந்திரன் |
ஒளிப்பதிவு | ஆர். வெங்கடேசன் |
படத்தொகுப்பு | ஏ. எல். ரமேஷ் |
வெளியீடு | 13 மார்ச் 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்தத் திரைப்படத்தில் தீபக் தின்கர் மற்றும் நேஹா ரத்னாகரன் (அறிமுகம்) ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.[4] இராஜேந்திரன், சென்றான், பாண்டியராஜன், சுவாமிநாதன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.[5]
கதை
சரவண பெருமாள் ( தீபக் தின்கர்) தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். அவருடைய தொழிலிலும், பணி செய்யும் இடத்திலும், சில பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். சக ஊழியரிடமும் சில பிரச்னைகளை எதிர் கொள்கிறான், அவனுக்கு கடனளித்தவர்கள் அவனை மிரட்டுகின்றனர், அவனது காதலி தீபிகா( நேகா ரத்னாகரன்) தன்னிடம் உண்மையாக இல்லை என நினைக்கிறான். தனது துயரங்களிருந்து தப்பிக்க அவனுடைய நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறான். சரவணன் மது மயக்கத்தில் அங்கேயிருந்த அடியாளான மார்க் (இராசேந்திரன்) என்பவனிடம் , தனது சக ஊழியரையும், தனக்கு கடனளித்தவனையும மற்றும் தனது காதலியையும் கொலை செய்யத் தூண்டுகிறான். பின்னர் அவ்விடத்தை விட்டு சென்று விடுகிறான். மறுநாள் காலை அவனது சக ஊழியரும்,கடனளித்தவனும் இறந்து கிடப்பதை காண்கிறான். மார்க் சரவணனை அழைத்து அவன்தான் இதை செய்ததாக கூறுகிறான். சரவணன், மார்க்கிடமிருந்து தனது காதலியை காப்பாற்ற நினைக்கிறான். முடிவில், இறந்தவர்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு விபத்தில் இறந்துள்ளது தெரிய வருகிறது. பிறகு என்னவாயிற்று என்பது திரைப்படத்தின் முடிவு சொல்கிறது.
நடிகர்கள்
- தீபக் தின்கர் - சரவணன் , சரவணப் பெருமாள்
- நேகா]] - தீபிகா
- சென்றாயன் - பால்பாண்டி
- இளங்கோ குமரவேல் - ஜேம்ஸ்
- இராசேந்திரன் - மார்க்
- பாண்டியராஜன் - திருப்பதி
- சுப்பு பஞ்சு அருணாச்சலம்
- மனோபாலா - மார்க்கண்டேயன்
- எம். எசு. பாசுகர் - பொன்வண்டு
- சுவாமிநாதன் - குழந்தைவேல்
- டி. எம். கார்த்திக் - காசிநாதன்
- ஜார்ஜ் மர்யான்
- கானா பாலா
- யோகி பாபு
தயாரிப்பு
அக்டோபர் 2014 இல் படப்பிடிப்பு முடிவடைந்தது.[6]
இசை
ஏ7 என்பவர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். .இதன் ஒலித்தொகுப்பு 2015 மார்ச் 02 அன்று வெளியிடப்பட்டது.[7]
இவனுக்கு தண்ணில கண்டம் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியோர் | நீளம் | |||||||
1. | "மாப்பிள்ள மாப்பிள்ள" | விஜய் யேசுதாஸ், சூரஜ் சந்தோஷ் | 4:48 | |||||||
2. | "எப்பவுமே வத்தாதுடா" | கானா பாலா | 4:02 | |||||||
3. | "லவ் வந்தா" | ஹரிஹரசுதன் | 4:16 | |||||||
4. | "யாராடா" | ஆண்டிரியா ஜெர்மியா | 3:39 | |||||||
5. | "த போ மாஸ்ஸப்" | கானா பாலா, மெக் சாய், ஏ7 | 4:05 | |||||||
மொத்த நீளம்: |
21:04 |
ஆதாரங்கள்
- ↑ "TV actor Deepak in Ivanuku Thannila Gandamz". 16 October 2014. http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/TV-actor-Deepak-in-Ivanuku-Thannila-Gandam/articleshow/44825302.cms. பார்த்த நாள்: 12 March 2015.
- ↑ Gopinath, Avinash (13 March 2015). "Ivanuku Thannila Gandam Movie Review: Rajendran Saves The Day But Only Just!". Filmibeat. பார்க்கப்பட்ட நாள் 13 March 2015.
- ↑ "Want to translate small screen success to big screen: S.N. Shaktevel". Business Standard. 8 October 2014. பார்க்கப்பட்ட நாள் 13 March 2015.
- ↑ "Neha Ratnakaran on 'Ivanuku Thannila Gandam': Tamil industry great place to mark one's debut". CNN-IBN. 12 March 2015. Archived from the original on 30 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 3 பிப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Rajendran's performance in Tamil horror-comedy Darling catapulted him to the big league of comedians". NDTV. 21 February 2015. பார்க்கப்பட்ட நாள் 12 March 2015.
- ↑ "TV actor Deepak in Ivanuku Thannila Gandamz". The Times of India. 16 October 2014. http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/TV-actor-Deepak-in-Ivanuku-Thannila-Gandam/articleshow/44825302.cms. பார்த்த நாள்: 12 March 2015.
- ↑ "Ivanuku Thannila Kandam |Jukebox". YouTube. Divo movies. பார்க்கப்பட்ட நாள் 2 March 2015.