இளம்பெருமான் அடிகள்
இளம்பெருமானடிகள் சிவபெருமான் திருமும்மணிக்கோவை என்னும் நூலின் ஆசிரியர்.
இவரது ஆசிரியப்பாக்கள் சங்கப்பாடல் போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளன.
வெண்பாச் செய்தி அகத்திணையின் வரும் கைக்கிளைப் பாடல்களாக உள்ளது.
கட்டளைக்கலித்துறைப் பாடல்களும் இவ்வாறே அமைந்துள்ளன.
இவற்றில் சங்க காலத் தமிழ்ச்சொற்கள் பெரிதும் பேணப்பட்டுள்ளன.
எனினும் மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியப் பாங்கு தேவாரக் காலத்துக்குப் பிந்தியது.
எனவே இவரது காலத்தை கி. பி. எட்டாம் நூற்றாண்டு என அறிஞர்கள் கணிக்கின்றனர்.
இளங்கோவடிகள், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகிய பழம்புலவர்களின் பெயர்கள் இங்கு நினைவில் கொள்ளத்தக்கவை.
காலம் கணித்த கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005