இலிங்க புராணம்

இலிங்க புராணம் என்னும் நூல் வரகுணராமர் என்னும் பாண்டியன் குலசேகரனால் இயற்றப்பட்ட இரண்டு நூல்களில் முதலாவது நூல். மற்றொன்று வாயு சங்கிதை. இரண்டும் புராண நூல்கள். இதில் இரண்டு காண்டங்கள் உள்ளன. முதலாவது பூர்வ காண்டத்தில் பாயிரமும், பதிகமும், 108 அத்தியாயங்களும் உள்ளன. அவற்றில் உள்ள பாடல்கள் 1955. இரண்டாவது உத்தர காண்டத்தில் 45 அத்தியாயங்களும், இவற்றின் பாடல்கள் 551-ம் உள்ளன. [1]

  • இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு

நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளில் சில

  • சூரிய வம்சம், சந்திர வம்சம்
  • சிவனின் பஞ்ச மூர்த்தங்கள்
  • மகாசிவலிங்கத்தின் தோற்றம்
  • கௌசிகன், நாரதன் போன்றோர் வரலாறு
  • பலவகையான தானங்கள்
துலாபுடதானம்
இரணியகர்ப்ப தானம்
திலபர்வததானம்
சொன்னபூமிதானம்
கற்பகதானம்
கணபதிதானம்
சொன்னதேவதானம்
இலட்சிமிதானம்
திலதேனுதானம்
சகத்திர கோதானம்
இரணிய அகவதானம்
இரணிய கன்னிகாதானம்
அரணிய இடபதானம்
சொன்னகஜ தானம்
தக்குபாலதானம்
விஷணுபிம்பதானம்
முன்னோடி
  • அப்பர் பாடிய இலிங்க புராணக் குறுந்தொகை (வடமொழி இலிங்கபுராணம் பற்றியது)

இவற்றையும் காண்க

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005

அடிக்குறிப்பு

  1. கொன்றைமாநகரம் சண்முக முதலியார் அச்சிட்ட நூல் 1877
"https://tamilar.wiki/index.php?title=இலிங்க_புராணம்&oldid=14443" இருந்து மீள்விக்கப்பட்டது