இராசராசன் உலா
இராசராசன் உலா என்னும் சிற்றிலக்கியம் ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பட்டது.
இந்த நூலில் 391 கண்ணிகள் உள்ளன.
இந்த நூலை அரங்கேற்றும்போது கேட்ட இராசராசன் ஒவ்வொரு கண்ணிக்கும் ஓராயிரம் பொன் பரிசாகத் தந்தானாம். [1]
இந்த நூலில் கூறப்பட்டுள்ள செய்திகள்
- பிரமன் முதல் இராசராசன் வரையிலான அரசமரபு
- இவர்களில் ஒருவன் ‘மார்பில் 96 புண்கொண்ட மன்னவன்
- வரராசராசன், சனநாதன், கண்டன் என்னும் பெயர்களும் இராசராசனுக்கு உண்டு.
- இராசராசன் யானையின் பெருமை
- குலோத்துங்கன் தில்லையில் செய்த திருப்பணிகள்
- கச்சிக் கற்றளி காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் பெருமை
- இவரது காலத்துக்கு முன்பிருந்த மூன்று பரணி நூல்களை இந்நூல் குறிப்பிடுகிறது.
காண்க
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005