இராகினி சங்கர்

இராகினி சங்கர் (Ragini Shankar) இவர் ஓர் இந்திய வயலின் கலைஞர் ஆவார். இவர் இந்துஸ்தானி பாரம்பரிய இசை மற்றும் இணைவை நிகழ்த்துகிறார். இவர் முனைவர் சங்கீதா சங்கர் என்பவரின் மகளாவார். [1] மேலும், புகழ்பெற்ற பத்ம பூசண் முனைவர் என் ராஜம் என்பாரது பேத்தியாவார். [2] இவர் தற்போது மும்பையில் வசிக்கிறார்.

இராகினி சங்கர்
Ragini Shankar.jpg
ராகினி சங்கர் ஒரு நிகழ்ச்சியில் நிகழ்த்துகிறார்
பின்னணித் தகவல்கள்
பிறப்புவாரணாசி, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை, இணைவு
தொழில்(கள்)வயலின் கலைஞர்
இசைக்கருவி(கள்)வயலின்
இணையதளம்www.raginishankar.com

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் தனது 4 வயதில் இசைப் பயிற்சியைத் தொடங்கினார். 11 வயதில் போபாலில் உள்ள பாரத் பவன் கலாச்சார மையத்தில் தனது முதல் பொது நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். [3] இவர் "கயாக்கி ஆங்" என்ற வயலின் வாசிப்பவராவார் .

கல்வி

சங்கர் இயந்திரப் பொறியியல் கல்வியில் சிறந்து விளங்கினார். மேலும் இசையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். [4]

தொழில்

கொல்கத்தாவில் 'டோவர்லேன் இசை விழா' யூரோபாலியா, [5] மேரு, [6] புனேவில், சவாய் காந்தர்வா பீம்சென் விழா, [7] டோவர் லேன் இசை மாநாடு, [8] சப்தக் இசை விழா, [9] மிலாப்ஃபெஸ்ட், [10] யக்சா ( திருவிழா), [11] பஞ்சம் நிஷாத்துக்கான ஆரோகி, [12] நடிகை, ஹேம மாலினி ஏற்பாடு செய்த ஜெய ஸ்மிருதி, [13] நுண்கலை கோயில், [14] இந்திய கலை நிகழ்ச்சிகளின் சங்கம், [15] டி. என். கிருட்டிணன் அறக்கட்டளை, [16] மற்றும் வங்காள இசை அறக்கட்டளை போன்ற பல்வேறு மதிப்புமிக்க விழாக்களில் இவர் தனது வயலின் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [17] மேலும் ஐடியா ஜல்சா என்ற தொலைக்காட்ட்சியிலும் இவரது இசை ஒளிபரப்பப்பட்டது. [18] இவர் தனது சகோதரி நந்தினி சங்கருடன் ஒரு காணொளிக் காட்சி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். [19] மற்றும் பாரம்பரிய இசை குறுந்தகட்டினையும் வெளியிட்டுள்ளார். [20]

இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளைல் தோன்றியதோடு, ஐக்கிய அமெரிக்கா, [21] கனடா, [22] இங்கிலாந்து, [23] நெதர்லாந்து, [24] ஜெர்மனி, பிரான்ஸ், [25] பெல்ஜியம், [26] ஹங்கேரி, சிங்கப்பூர், [27] மலேசியா மற்றும் துபாய் போன்ற இடங்களிலும் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [28] ராகினி தனது பயணங்களின் போது விரிவுரைகளயும் வழங்குகிறார் . மேலும், ஒரு வழக்கமான அடிப்படையில் பட்டறைகளையும் நடத்துகிறார்.

மும்பையில் உள்ள விஸ்லிங் வூட்ஸ் சர்வதேச நடனப் பள்ளியின் ஆசிரிய உறுப்பினராக இருக்கிறார். [29]

இவர் புகழ்பெற்ற பாலிவுட் பாடலாசிரியர் இர்ஷாத் காமிலின் தி இங்க் பேண்ட் என் இசையின் ஒரு பகுதியாவார். இது இசையுடன் பின்னப்பட்ட கவிதைத் தொடராகும். [30] பிரபல பிரெஞ்சு இசையமைப்பாளர் தியரி பெக்கோ [31] என்பவரால் உருவாக்கப்பட்ட சங்காட்டா என்ற இந்தோ-பிரெஞ்சு இசை திட்டத்தின் ஒரு பகுதியாவார். இதைப் பற்றி பிரான்சின் லு மொண்டே என்ற இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் விவரிக்கப்பட்டது. [32] இவரது சமீபத்திய நிகழ்வுகளில் பிரபலமான இந்திய இசைக்கு ஒரு புதிய ஒலியை வழங்கும் புதுமையான இணைவு இசைக்குழுவான இன்ஸ்ட்ரிங் என்பது அடங்கும். [33] இந்திய இசையைப் பற்றி பேச டெட் மாநாட்டின் மேடையில் தோன்றியுள்ளார். [34] இவர் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கலாச்சார உதவித்தொகை பெற்றவர் ஆவார்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

இவருக்கு, திரைப்பட நடிகையும் நடனக் கலைஞருமான ஹேமா மாலினி, 'ஜெய ஸ்மிருதி' என்றப் பட்டத்தை 2012இல் வழங்கினார்

2018இல் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, அவர்கள் " ஜஷ்ன்-இ-யங்கிஸ்தான்" [35] [36] என்ற பட்டத்தை வழங்கினார். இது நாட்டின் ஆற்றல்மிக்க இளைஞர் சக்தியைக் கொண்டாடும் மரியாதையாகும்.

குறிப்புகள்

  1. Sangeeta Shankar - The Legacy Continues, archived from the original on 2015-04-11, retrieved 2020-02-23
  2. N. Rajam
  3. Ragini Shankar's official website
  4. https://mumbaimirror.indiatimes.com/entertainment/music/meet-dr-sangeeta-shankar-and-her-daughters-ragini-and-nandini-shankar-who-weave-magic-with-their-violins/articleshow/63848448.cms
  5. Europalia, archived from the original on 2018-10-31, retrieved 2020-02-23
  6. https://maharishigandharva.wordpress.com/tag/meru/
    - https://www.youtube.com/watch?v=Xpc_zNWS848
  7. DNA Syndication

    - DNA India - Pune's Sawai Gandharva Mahotsav ends on a soulful note

    - Mid-Day Archives: Performance by 3 generations of family steals show on final day
  8. Dover Lane Music Conference

    - Dover Lane Music Conference, archived from the original on 2015-02-15, retrieved 2020-02-23
  9. Saptak Annual Festival

    - Saptak Annual Festival

    - Saptak Annual Festival

    - Saptak Annual Festival
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2020-09-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200920114455/https://www.milapfest.com/events/indika-evening-raga-ragini-nandini-shankar/. 
  11. Yaksha (festival)
  12. Pancham Nishad - Past Events, archived from the original on 2014-06-23, retrieved 2020-02-23
  13. Solaris Event Archives, archived from the original on 2016-03-04, retrieved 2020-02-23
  14. Thyagaraja Tansen Music Festival, The Temple of Fine Arts, Malaysia
  15. Gallery, The Association of Performing Arts of India, archived from the original on 2018-06-09, retrieved 2020-02-23
  16. Parampara, T. N. Krishnan Foundation, archived from the original on 2016-03-03, retrieved 2020-02-23
  17. https://www.thedailystar.net/backpage/musical-marvel-continues-180106
  18. Youtube, Payoji Maine - Bhajan (Dr. N. Rajam, Sangeeta Shankar, Ragini Shankar & Nandini Shankar)
  19. Legendary Legacy, Record Label, archived from the original on 2016-03-04, retrieved 2020-02-23
  20. Legendary Legacy, Record Label, archived from the original on 2016-03-03, retrieved 2020-02-23
  21. https://www.skidmore.edu/zankel/documents/Jan2017-ZankelSpringBrochure.pdf
    - https://muse.union.edu/music/ragini-shankar-violin/
  22. https://www.youtube.com/watch?v=Pc3WBdwQV30
  23. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2020-09-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200920114455/https://www.milapfest.com/events/indika-evening-raga-ragini-nandini-shankar/. 
  24. https://maharishigandharva.wordpress.com/tag/meru/
  25. https://detoursdebabel.fr/Sangata-1057 பரணிடப்பட்டது 2018-10-31 at the வந்தவழி இயந்திரம்
    - https://www.indeenfrance.com/lille.php/lille-lire/ragini-shankar-en-concert
  26. https://europalia.eu/archives/india/en/article/three-generations_141.html பரணிடப்பட்டது 2018-10-31 at the வந்தவழி இயந்திரம்
    - http://www.art-base.be/index.php?view=details&id=593%3Atemplate-concert&option=com_eventlist
  27. https://www.rasikas.org/forums/viewtopic.php?t=18588
  28. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-10-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181031005201/http://gulftoday.ae/portal/eb181127-586f-40ea-bf9c-0d0e112db736.aspx. 
  29. https://www.whistlingwoods.net/faculty
  30. https://www.business-standard.com/article/news-ians/rahman-launches-irshad-kamil-s-ink-band-music-series-118032100608_1.html
    - https://www.youtube.com/watch?v=5UEaguxxOas
  31. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2020-02-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200223102104/http://www.ensemblevariances.com/en/projects/sangata.html. 
  32. https://www.lemonde.fr/musiques/article/2018/03/30/sangata-le-nouveau-raga-occidental-de-thierry-pecou_5278768_1654986.html
  33. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2020-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200927173659/https://www.milapfest.com/events/indika-instrings/. 
  34. https://www.ted.com/tedx/events/29734
  35. https://m.dailyhunt.in/news/india/english/news24online-epaper-newsonline/jashn+e+youngistan+2018+honoured+violinsts+ragini+shankar+and+nandini+shankar-newsid-102297839
  36. https://m.dailyhunt.in/news/india/english/news24+english-epaper-newstwen/jashn+e+youngistan+2018+to+honour+ragini+shankar+and+nandini+shankar-newsid-102192204
"https://tamilar.wiki/index.php?title=இராகினி_சங்கர்&oldid=9526" இருந்து மீள்விக்கப்பட்டது