இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி. இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்"கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி ஜின்னா , அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், இதன் தலைவரானார் காயிதே மில்லத்.
Indian Union Muslim League (IUML) இந்திய ஒன்றிய இஸ்லாமிய கூட்டிணைவு | |
---|---|
தலைவர் | கே. எம். காதர் மொகிதீன் |
நிறுவனர் | நவாப் சலீம் முல்லாகான் |
மக்களவைத் தலைவர் | ஈ. டி. மொகமது பசீர் |
மாநிலங்களவைத் தலைவர் | அப்துல் வஹாப் |
தொடக்கம் | 10 மார்ச்சு 1948 |
தலைமையகம் | மரைக்காயர் லெப்பை தெரு,சென்னை. |
இளைஞர் அமைப்பு | முசுலிம் இளையோர் லீக் |
பெண்கள் அமைப்பு | முசுலிம் பெண்கள் லீக் |
அரசியல் நிலைப்பாடு | வலது |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி [1] |
கூட்டணி | ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி (தமிழ்நாடு) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 3 / 543
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 1 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | 15 / 140
கேரளா |
தேர்தல் சின்னம் | |
- ஏணி | |
இணையதளம் | |
indianunionmuslimleague.in |
சுதந்திர இந்தியாவில்
இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-ல் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது., பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது.
தலைவர்கள்
காயிதே மில்லத்துக்கு பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்தியத் தலைவராக இப்ராஹிம் சுலைமான் சேட், பனாத்வாலா, முன்னாள் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் ஈ. அகமது ஆகியோர் பணியாற்றினர். தற்போது கே. எம். காதர் மொகிதீன் அகில இந்தியத் தலைவராக உள்ளார்.[2][3]
தமிழகத்தில் அப்துல்சமது, கே. எம். காதர் மொகிதீன் ஆகியோர் தமிழக தலைவராக பணியாற்றினர்.
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்
1952 ஆம் ஆண்டு முதல் 1967 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்
வருடம் | வெற்றி பெற்றவர் | வெற்றி பெற்ற தொகுதி |
---|---|---|
1952 | கண்ணியமிகு காயிதே மில்லத் முகம்மது இசுமாயில் | சென்னை மாகாண சட்ட சபை |
1967 | ஏ.ஜி. சாகிப் என்கிற அப்துல் கபூர் சாகிப் | ராணிப்பேட்டை |
1967 | ஹபிபுல்லா பெய்க் | துறைமுகம் |
1967 | எம். எம். பீர்முஹம்மது | மேலப்பாளையம் |
தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
1971 ஆம் ஆண்டு முதல் 2021 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மக்களவை)
1952 ஆம் ஆண்டு முதல் 2021 வரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்
வருடம் | வெற்றி பெற்றவர் | வெற்றி பெற்ற தொகுதிகள் | சின்னம்/ஆதரவு |
---|---|---|---|
1967 | எஸ். எம். முகம்மது செரிப் | இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி | சுயேட்சை |
1971 | எஸ். எம். முகம்மது செரிப் | பெரியகுளம் மக்களவைத் தொகுதி | ஏணி |
2004 | கே. எம். காதர் மொகிதீன் | வேலூர் மக்களவைத் தொகுதி | உதய சூரியன் |
2009 | எம். அப்துல் ரஹ்மான் | வேலூர் மக்களவைத் தொகுதி | உதய சூரியன் |
2019 | நவாஸ் கனி | இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி | ஏணி |
2024 | நவாஸ் கனி | இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி | ஏணி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் (மாநிலங்களவை)
வருடம் | வெற்றி பெற்றவர் | சின்னம்/ஆதரவு |
---|---|---|
1964 | ஆ. கா. அ. அப்துல் சமது | ஏணி |
1970 | ஆ. கா. அ. அப்துல் சமது | ஏணி |
1968 | எஸ். ஏ. காஜா மொய்தீன் | ஏணி |
1972 | ஏ. கே. ரிபாயி | ஏணி |
1974 | எஸ். ஏ. காஜா மொய்தீன் | ஏணி |
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம்,பூம்புகார், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.[4] இதில் கடையநல்லூரில் முகமது அபுபக்கர் வெற்றிபெற்று இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் | வாக்குகள் | வாக்கு % |
---|---|---|---|
5 | 1 | 313808 | 0.7 %[6] |
கேரள சட்டமன்றத் தேர்தல், 2016
2016,கேரளா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைத்து 24 தொகுதிகளில் போட்டியிட்டது.இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் | வாக்குகள் | வாக்கு % |
---|---|---|---|
24 | 18 | 1496864 | 7.4 %[7] |
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் ஏணி சின்னத்தில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[8][9]
ஆதாரம்
- முஸ்லிம் லீக் இணையத்தளம் பரணிடப்பட்டது 2019-04-27 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. Archived from the original (PDF) on 24 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
- ↑ "Indian Union Muslim League Kerala State Committee (IMUL) – Party History, Symbol, Founders, Election Results and News".
- ↑ Khader Mohideen elected as national president of IUML Times of India, Feb 27, 2017
- ↑ "வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை..இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொகுதிகள்". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்ரல் 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
- ↑ "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA. 19 மே 2016. Archived from the original on 2016-11-24. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2016.
- ↑ "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA. 19 மே 2016. Archived from the original on 2016-05-24. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2016.
- ↑ "தி.மு.க. கூட்டணி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3; மனிதநேய மக்கள் கட்சிக்கு- 2 ; ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை". தினத்தந்தி நாளிதழ். பார்க்கப்பட்ட நாள் 2 மார்ச் 2021.
- ↑ செய்திப்பிரிவு, ed. (01 Mar 2021). தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் ஐயூஎம்எல்-க்கு- 3; மமக-வுக்கு- 2 தொகுதிகள் ஒதுக்கீடு. தி ஹிந்து நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)