அப்துல் சமது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அப்துல் சமது
அப்துல் சமது
இயற்பெயர்/
அறியும் பெயர்
அப்துல் சமது
பிறந்ததிகதி அக்டோபர் 4, 1926,
காரைக்கால்,
புதுச்சேரி
பிறந்தஇடம் அக்டோபர் 4, 1926,
காரைக்கால்,
புதுச்சேரி
இறப்பு நவம்பர் 4, 1999
(அகவை 73)
சென்னை
அரசியல்கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்
துணைவர் நர்கீஸ்பானு
பிள்ளைகள் 3 மகன், 2 மகள்

ஆ. கா. அ. அப்துல் சமது (அக்டோபர் 4, 1926 - நவம்பர் 4, 1999) இந்திய அரசியல்வாதி ஆவார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்தார். இவருடைய தந்தை ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி திருக்குர்ஆனை முதன்முதலில் முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார்[1].

அரசியலில்

இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். 1974 தமிழக இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தலைவராகவும், பின்னர் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் தமது இறுதிகாலம் வரை பணியாற்றினார். மணிச்சுடர் நாளிதழை துவக்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். நவம்பர் 4 1999 -ல் காலமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அப்துல்_சமது&oldid=3011" இருந்து மீள்விக்கப்பட்டது