இசை, கூத்து நூல்கள்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் நூலுக்கு உரை எழுதுகையில் கானல்வரி பகுதியில் இசை, கூத்து பற்றி உரை எழுத உதவிய நூல்கள் எவை எவை என்பதை அவரது உரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை ஐந்து. அவை இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதியம், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் என்பன.
அட்டவணை
நூல் | பொருள் | யாப்பு | ஆசிரியர் | குறிப்பு |
---|---|---|---|---|
இசை நுணுக்கம் | இசைத்தமிழ் | வெண்பா | சிகண்டி | சாரகுமாரன் இசை அமைத்தற்கு உதவும் வகையில், குறுமுனியின் மாணாக்கர் சிகண்டி செய்த நூல் |
இந்திரகாளியம் | இசைத்தமிழ் | நூற்பா | யமளேந்திரர் | இவர் பாரசவ முனிவர். இந்திரகாளியம் ஒரு பாட்டியல் நூல் |
பஞ்சமரபு | நாடகத்தமிழ் | வெண்பா | அறிவனார் | வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் இதன் மூலத்தை உதவினார் |
பரதசேனாபதீயம் | நாடகத்தமிழ் | வெண்பா | ஆதிவாயிலார் | - |
மதிவாணர் நாடகத்தமிழ் | நாடகத்தமிழ் | நூற்பா | பாண்டியன் மதிவாணனார் | வசைக்கூத்துக்கு மறுதலையாகிய புகழ்க்கூத்து பற்றிய நூல் |
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005