ஆறுமனமே

ஆறுமனமே (Aarumaname) 2009இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படம். இதை இயக்கியவர் சுதீஷ் சங்கர். இதில் தீபக், நிகோலெ மற்றும் கார்த்திகா மேத்யூ முக்கிய கதாபாத்திரத்திலும், கஞ்சா கறுப்பு, சுதீர் சுகுமாரன், ராஜேஷ், பொன்வண்ணன், சிறீமன் மற்றும் ஆனந்த் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப் படத்தை, கே. எஸ். ராஜன், ஆர். எஸ். வல்சலா ராஜன் தயாரித்துள்ளனர். சிறீகாந்து தேவா இசை அமைப்பில் இத் திரைப்படம் சூலை 31, 2009இல் வெளியிடப்பட்டது.[1][2][3]

ஆறுமனமே
இயக்கம்சுதீஷ் சங்கர்
தயாரிப்புகே. எஸ். ராஜன்
ஆர். எஸ். வல்சலா ராஜன்
கதைதினேஷ் பாலத் (வசனங்கள்)
திரைக்கதைசுதீஷ் சங்கர்
இசைசிறீகாந்து தேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஅம்புமணி
படத்தொகுப்புவி. ஜெய் சங்கர்
கலையகம்ஐ சோழா புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடுசூலை 31, 2009 (2009-07-31)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

இத் திரைப்படத்தின் கதை அதிரடி காட்சியில் தொடங்குகிறது. வைத்தி (தீபக்) தனது சகோதரன் மூர்த்தியை சிறீமன் குண்டர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக ஓடி வருகிறான். அவன் வருவதற்குள் மூர்த்தி பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடக்கிறான்.

வைத்தி, ஓய்வு பெற்ற தன் தந்தை அருணாச்சலம் (ராஜேஷ்), தாய், மற்றும் சகோதரன் மூர்த்தியுடன் வாழ்ந்து வருகிறான். மூர்த்தி, மத்திய பொதுப்பணித் துறையில் பொறியாளராக பணிபுரிகிறான். மேலும், அருணாச்சலத்திற்கு மூர்த்தியை மிகவும் பிடிக்கும். வைத்தி, இளகிய மனதுடைய ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறான். அருணாச்சலத்திற்கு வைத்தியைப் பிடிப்பதில்லை. மூர்த்தி தன் பணியில் நேர்மையாக இருந்ததினால், ரத்தினவேல் (சுதீர் சுகுமாரன்) மற்றும் ராஜதுரையின் (பொன்வண்ணன்) கோபத்திற்கு ஆளாகிறான். இவர்கள் இருவரும் தங்களின் பணிக்காக மூர்த்தியின் ஒப்புதல் வேண்டி தொந்தரவு செய்தனர். இதற்கிடையில், வைத்தியும், ரத்தினவேல் மற்றும் ராஜதுரையின் சகோதரி ஆனந்தியும் காதலிக்கின்றனர். தேன்மொழியை (மைதிலி) திருமணம் செய்து கொள்ளுமாறு சூழ்நிலைகள் மூர்த்தியை கட்டாயப்படுத்துகின்றன. ஆனால் மூர்த்திக்கு, தேன்மொழியைப் பிடிக்கவில்லை.

தற்போது, திரைக்கதை முதல் காட்சிக்கு வருகிறது. மூர்த்தி வைத்தியின் கைகளில் இருக்கிறான். அவன் இறக்கும் போது காதம்பரி என்கிற பெயரை உச்சரிக்கிறான். வைத்தி, ரத்தினவேல் மற்றும் ராஜதுரைதான் தனது சகோதரனை கொன்று விட்டார்கள் என சந்தேகிக்கிறான். சில தினங்கள் கழித்து, ஒரு பெண் தன் குழந்தையுடன் வைத்தியை சந்தித்து, தன் பெயர் காதம்பரி (கார்த்திகா மேத்யூ),என்றும், மூர்த்தியின் மனைவி என்றும் கூறுகிறாள். வைத்தி அவள் மேல் இரக்கப்பட்டு மூர்த்தியின் வீட்டில் தங்கவைக்கிறான். கிராமத்தில் உள்ள அனைவரும் வைத்தி, மற்றும் காதம்பரியை இணைத்து அவதூறாக பேசுகின்றனர். இதனால் வைத்தி தன் தந்தை மற்றும் காதலி ஆனந்தியின் அன்பையும் இழக்கிறான். ஒரு நாள் பெரியசாமி (கஞ்சா கறுப்பு) வைத்தியிடம், காதம்பரியின் சகோதரன் பூபதிதான் மூர்த்தியை கொன்றதாக தெரிவிக்கிறான். பிறகு நடக்கும் சம்பவங்கள் கதையின் முடிவாக உள்ளது.

நடிப்பு

பாடல்கள்

இப் படத்திற்கு இசை அமைத்தவர் சிறீகாந்து தேவா. பாடல்களை சினேகன், கபிலன் மற்றும் கிருதியா எழுதியுள்ளனர்.[4]

எண் பாடல் பாடியவர்கள் காலம்
1 'மானாட்டம் மயிலாட்டம்' நவீன் மாதவ் 5:40
2 'சித்திரம் பேசுதடி' ஹரிஷ் ராகவேந்திரா, சாதனா சர்கம் 5:32
3 'ஆரா ஆரிரோ' கார்த்திக் 5:28
4 'யாரோ யாரோ' விஜய் 5:21
5 'நான் காதலிக்கிறேன்' சுவேதா மோகன், உதித் நாராயண் 5:10
6 'ஆரா ஆரிரோ' சுவேதா மோகன் 4:59

வரவேற்பு

இத் திரைப்படம் பொதுவாக எதிர்மறையான வரவேற்பை பெற்றது.[5][6]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆறுமனமே&oldid=30638" இருந்து மீள்விக்கப்பட்டது