அஸ்ட்ரோ விண்மீன்
அஸ்ட்ரோ விண்மீன் எச்டி என்பது மலேசிய நாட்டு தமிழ் மொழி உயர் வரையறை பொழுதுபோக்கு இலவச செய்மதித் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை அக்டோபர் 18, 2013 ஆம் ஆண்டு முதல் தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான த. ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்சு ஆகியோருக்குச் சொந்தமானது ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவின் முதல் 24 மணி நேர பொது பொழுதுபோக்கு தமிழ் உயர் வரையறை தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்.[1][2]
அஸ்ட்ரோ விண்மீன் எச்டி | |
---|---|
தொடக்கம் | 18 அக்டோபர் 2013 (மலேசியா) 1 ஜூலை 2015 (சிங்கப்பூர்) |
வலையமைப்பு | அஸ்ட்ரோ |
உரிமையாளர் | அஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் |
பட வடிவம் | 16:9 எச்டி |
நாடு | மலேசியா |
ஒலிபரப்பப்படும் பகுதி | மலேசியா புரூணை சிங்கப்பூர் |
சகோதர ஊடகங்கள் | அஸ்ட்ரோ வானவில் அஸ்ட்ரோ வெள்ளித்திரை அஸ்ட்ரோ தங்கத்திரை |
இந்த தொலைக்காட்சியில் தொடர்கள், நடனம் மற்றும் பாட்டு போட்டி நிகழ்ச்சிகள், பயணக் குறிப்புகள், வாழ்க்கை முறை நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள், பிரபல சமையல் நிகழ்ச்சிகள், பாரம்பரிய கர்நாடக இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைக் ஒளிபரப்பாக்குகின்றது.
இது அஸ்ட்ரோ வானவில், வசந்தம் தொலைக்காட்சி, புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் வேந்தர் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு செய்துவருகின்றது. மேலும் 2016 சனவரி 22 முதல் 25 வரை தைப்பூசத் திருவிழாவை 55 மணிநேரம் இடைவிடாமல் நேரலையில் ஒளிப்பரப்பியது. அத்துடன் நீண்ட நேர நேரடி ஒளிபரப்பு விழாவிற்கான கின்னஸ் உலக சாதனையையும் இந்த தொலைக்காட்சி பெற்றுள்ளது.[3]
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-07-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180702201347/http://singteltv.com.sg/channels-on-demand_channels_details.asp?ch=626.
- ↑ "astro debuts first 24 hour tamil hd channel" இம் மூலத்தில் இருந்து 22 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151122113609/http://www.onscreenasia.com/article/astro-debuts-s-e-a-first-24-hour-tamil-hd-channel/13144.
- ↑ http://www.astroulagam.com.my/Community/articledetails/tabid/4433/articleId/1841/Longest-Livestreamed-Festival