அறிவியல் துறையில் தமிழர்கள்

அறிவியல் துறையில் தமிழர்கள் என்பது உலகெங்கும் பரவியுள்ள அறிவியல் துறையைச் சார்ந்த, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அறிவியலாளர்கள், ஆய்வு மாணவர்கள், மற்றும் அவர்களது ஆய்வுகள் குறித்த பட்டியலாகும்.

  • சித்தர்கள் என்போர் பண்டைய தமிழகத்தின் அறிவியலாளர்கள் ஆவர். அவர்கள் ஆன்மீகவாதிகளோ சாமியார்களோ அல்லர். அவர்கள் விஞ்ஞானிகள் (Scientists). அவர்கள் வானியல், மருத்துவம், வேதியியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்தனர்.

96 உடல்தத்துவங்களாகப் பிரித்து மனித உடற்கூறியலை ( Human Anatomy) ஆராய்ந்தனர்.

நோயியல் (Pathology) துறையில் மிக ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 4448 என்று வரையறுத்தனர். இது நோயியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சி அறிவைக் காட்டுகிறது. மூச்சுறுப்புகளில் ஏற்படும் நோய்களை கப நோய்கள் எனவும், செரிமான உறுப்புகளில் ஏற்படும் நோய்களைப் பித்த நோய்கள் எனவும், மற்றவற்றை வாத நோய்கள் எனவும் வகைப்படுத்தினர்.

மருந்தியல் (Pharmacology) பற்றி விரிவான ஆய்வு செய்தனர். அதன் பயனாக கண்டுபிடித்த மருந்துகளை 32 வகை உள்மருந்துகள், 32 வகை வெளிமருந்துகள் என வகைப்படுத்தினர். மருந்தியல் துறையில் ஏராளமான நூல்களைப் படைத்துள்ளனர்.

நரம்பியலை ஆராய்ந்து வர்ம மருத்துவத்தைக் கண்டுபிடித்தனர். இந்த வர்ம மருத்துவம் சித்தர்கள் கண்டுபிடித்த நரம்பியல் மருத்துவம் (Neurological medicine) ஆகும்.

வேதியியல் துறையை வாதம் என்ற பெயரில் ஆராய்ந்தனர். போகர் வேதியியல் துறையில் ஆழமான விரிவான ஆய்வுகளைச் செய்தவர். செயற்கையாக வேதிப்பொருள்களாகிய தாதுக்களைத் தயாரிக்கும் முறைகளைக் கண்டுபிடித்தனர். அதற்கு வைப்புமுறை என்று பெயரிட்டனர். சித்தர்கள் எழுதிய வாதநூல்கள் அனைத்தும் வேதியியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சியை வெளிப்படுத்துபவை ஆகும்.

விண்பொறியியல் துறையில் போகர் ஆராய்ந்திருக்கிறார். அதன் பயனாக பஞ்சபூதத்தால் செய்த ஆகாயப்புரவி என்ற விமானத்தைக் கண்டுபிடித்து சீனாவுக்குப் பயணம் செய்திருக்கிறார். ஆகாயப்புரவி என்ற விமானம் பற்றிய குறிப்புகளை போகர் ஏழாயிரம் என்ற நூலில் காணமுடிகிறது.

உடல், மனம், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் யோக ஆய்வுகளைச் செய்து யோக நூல்களையும் படைத்தனர்.

மெய்யியல் என்னும் தத்துவத்துறையிலும் ஆய்வுகளைச் செய்தனர். தமது தத்துவ ஆய்வுச் சிந்தனைகளை ஞானநூல்களாகப் படைத்தனர். மொத்தத்தில் சித்தர்கள் பலதுறை வல்லுநர்களாக விளங்கினர்.

சித்த மருந்தியலையும் , சித்த வேதியியலாகிய வாதத்தையும் நவீன வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி ஆராய்வதன் மூலம் அறிவியல் உலகிற்குப் புதிய வெளிச்சத்தைத் தர முடியும். உலக அறிவியல் வரலாற்றில் சித்தர்களை அறிவியலாளர்களாகக் குறிப்பிடச்செய்ய வேண்டியது நமது கடமை.

இந்தியா

இலங்கை

மேற்கோள்கள்

  1. "கனவல்ல எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்". தினமணி. https://www.dinamani.com/india/2019/jul/27/apj-abdul-kalam-video-3201396.html. பார்த்த நாள்: 28 June 2021. 
  2. "வீண்பழி, தேசத் துரோகம், கைது, சட்டப்போராட்டம்: நிஜ ‘Rocketry’ நாயகன் ‘நம்பி நாராயணன்’ மீண்டது எப்படி?". 2022-11-09. https://yourstory.com/tamil/isro-scientist-nambi-narayanan-life-journey-rocketry-tamil-actor-madhavan. 
  3. "ஐராவதம் மகாதேவன்: தமிழின் தொன்மைக்குச் சான்றுகளை கொடுத்தவர்" (in ta). https://www.hindutamil.in/news/opinion/columns/147112-.html. 
  4. Kishore, Kavita (2014-02-12). "Historical linguistics out in the cold: R. Mathivanan" (in en-IN). https://www.thehindu.com/news/cities/puducherry/historical-linguistics-out-in-the-cold-r-mathivanan/article5680531.ece. 
  5. ValaiTamil. "க. சீ. கிருட்டிணன் (இயற்பியல்)". http://www.valaitamil.com/k-s-krishnan_13705.html. 
  6. Correspondent, Vikatan. "“தலைவர் நம்மாழ்வார்!” - வரலாறு" (in ta). https://www.vikatan.com/government-and-politics/politics/36740-. 
  7. "அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு...!". 2019-01-04. http://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/01/04155149/The-amazing-man-GD-Naidu.vpf. 
  8. 100010509524078 (2020-12-10). "முதன்முதலாக நோபல் பரிசு வழங்கப்பட்ட நாள்: 10-12-1901" (in English) இம் மூலத்தில் இருந்து 2021-06-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210628154857/https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2020/12/10025706/2147664/Nobel-prize-first-day.vpf. 
  9. Eliezer, C.J., The hydrogen atom and the classical theory of radiation, Proc. Camb. Phil. Soc. 39, 173_ (1943)
  10. "Former Vice Chancellors of Eastern University, Sri Lanka". Eastern University, Sri Lanka. 2020 இம் மூலத்தில் இருந்து 2021-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210512184612/https://www.esn.ac.lk/about/Former-Vcs. பார்த்த நாள்: 2021-05-12. 
  11. "விஞ்ஞனிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்" (in en). 2011-12-05. https://jaffnanetwork.wordpress.com/2011/12/05/scientiest/.