அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் (Ammapettai block) இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்து ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பாபநாசம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்மாபேட்டையில் இயங்குகிறது
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,00,022 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 37,148 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 99 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து ஆறு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அகரமான்குடி
- அருந்தவபுரம்
- அருமலைக்கோட்டை
- அன்னப்பான்பேட்டை
- ஆலங்குடி
- இடையிருப்பு
- இராராமுத்திரகோட்டை
- இரும்புதலை
- உக்காடை
- எடவாக்குடி
- ஒம்பாத்துவேலி
- கதிர்நத்தம்
- கம்பார்நத்தம்
- கருப்பமுதலையார்கோட்டை
- கலஞ்சேரி
- காவலூர்
- கீழகோயில்பத்து
- குமிலாகுடி
- கொத்தங்குடி
- கோவாதகுடி
- சாலியமங்கலம்
- சிறுமாக்கநல்லூர்
- சுரைக்காயூர்
- சுலியக்கோட்டை
- திருக்கருக்காவூர்
- திருபுவனம்
- திருவைய்யாத்துக்குடி
- தேவராயன்பேட்டை
- நல்லவன்னியன்குடிகாடு
- நெடுவாசல்
- நெய்குன்னம்
- நெல்லிதோப்பு
- பள்ளியூர்
- புலவர்நத்தம்
- புலியக்குடி
- பூண்டி
- பெருமாக்கநல்லூர்
- மக்கிமலை
- மேலகாலக்குடி
- மேலசெம்மன்குடி
- வடக்கு மாங்குடி
- வடபாதி
- விழுதியூர்
- வேம்புக்குடி
- வைய்யாசேரி
- ஜென்பகாபுரம்