அபிமன்யு (திரைப்படம்)
அபிமன்யு 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். சோமசுந்தரம், ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இந்த படத்தில் இடம்பெற்ற திருச்சி லோகநாதன்-யூ, ஆர்.ஜீவரத்தினம் ஆகியோர் பாடிய புது வசந்தமாமே வாழ்விலே என்ற பாடல் மிகப் பிரபலமானது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் சுப்பராமனிடம் உதவியாளராக இருந்த எம். எஸ். விஸ்வநாதன் ஆவார். திரைப்படத்துக்கென அவர் முதன்முதலில் மெட்டமைத்தது இந்தப் பாடலுக்குத்தான். இந்தப் படத்துக்கு ஏ.எஸ்.ஏ. சாமியுடன் இணைந்து மு. கருணாநிதி வசனம் எழுதினார். ஆனால், அவரது பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[2]
அபிமன்யு | |
---|---|
இயக்கம் | எம். சோமசுந்தரம் ஏ. காசிலிங்கம் |
தயாரிப்பு | சோமு யூப்பிட்டர் மொகிதீன் |
கதை | திரைக்கதை ஏ. எஸ். ஏ. சாமி |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு சி. ஆர். சுப்புராமன் |
நடிப்பு | எஸ். எம். குமரேசன் பி. வி. நரசிம்ம பாரதி எம். ஜி. ஆர் எம். ஜி. சக்கரபாணி நம்பியார் யு. ஆர். ஜீவரத்தினம் எம். ஆர். சந்தானலட்சுமி மாலதி சி. டி. ராஜகாந்தம் புளிமூட்டை ராமசாமி |
ஒளிப்பதிவு | டபிள்யூ. ஆர். சுப்பராவ் |
படத்தொகுப்பு | ஏ. காசிலிங்கம் |
நடன அமைப்பு | வி. ராகவையா |
கலையகம் | சென்ட்ரல், கோயம்புத்தூர் |
வெளியீடு | மே 6, 1948 |
ஓட்டம் | . |
நீளம் | 16325 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- எஸ். எம். குமரேசன் (அபிமன்யு)
- பி. வி. நரசிம்ம பாரதி (கிருஷ்னன்)
- ம. கோ. இராமச்சந்திரன் (அர்ஜுனன்)
- புளிமூட்டை ராமசாமி ( கதோட்கஜன்)
- எஸ். வி. சுப்பையா (சகுனி)
- எம். என். நம்பியார் (இலட்சுமணன்)
- ஆர். பாலசுப்பிரமணியம் (துரியோதனன்)
- எம். ஜி. சக்கரபாணி (பலராமன்)
- நாராயண பிள்ளை (துரோணர்)
- முஸ்தபா (கர்ணன்)
- டி. எம். ராமசாமி பிள்ளை (ஜாங்கிளி மாமா)
- நாட் அண்னாஜிராவ் (விதுரர்)
- எஸ். ஏ. நடராஜன் (ஜெயத்ரதன்)
நடிகைகள்
- எம். ஆர். சந்தானலட்சுமி (சுபத்திரை)
- யு. ஆர். ஜீவரத்தினம் (வத்சலா)
- எம். எஸ். எஸ். பாக்கியம் (மாயப்பெண்)
- ஆர். மாலதி (ருக்மணி)
- கே. எஸ். அங்கமுத்து (குடியானவள்)
- சி. ஆர். சரஸ்வதி (ரேவதி)
- சி. டி. ராஜகாந்தம்
பாடல்கள்
பாடல்களை பாபநாசம் சிவன், சுந்தர வாத்தியார், பூமிபாலகதாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர்.[3]
- புது வசந்தமாமே வாழ்விலே.. (எஸ். எம். குமரேசன், யு. ஆர். ஜீவரத்தினம்)[4]
- உங்கள் முக அரவிந்தம்.. (ஆர். மாலதிக்காக கே. வி. ஜானகி )
- புது மலரின் அழகே ஆனந்தம்.. (யு. ஆர். ஜீவரத்தினம்)
- ஜெயமே.. (யு. ஆர். ஜீவரத்தினம்)
- வானோர் சேனைகளும்.. (யு. ஆர். ஜீவரத்தினம்)
- ஏ ஐயாமாரே வாங்க ஓ அம்மாமாரே வாங்க (திருச்சி லோகநாதன், கே. வி. ஜானகி) (டி. கே. சுந்தர வாத்தியார்)
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (1 அக்டோபர் 2009). "Abhimanyu". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-abhimanyu/article27351.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2016.
- ↑ கே.கே.மகேஷ் (1 திசம்பர் 2017). "நடிக்கும்போதே மரணம்". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/cinema/cinema-others/article21228290.ece. பார்த்த நாள்: 1 திசம்பர் 2017.
- ↑ "ஜுபிடர் 'அபிமன்யு'". பேசும் படம்: பக். 63-65. சூலை 1948.
- ↑ புது வசந்தமாமே பாடல்