அந்த ஒரு நிமிடம்

அந்த ஒரு நிமிடம் என்பது 1985 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மேஜர் சுந்தரராஜன் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களிலும், ஜெயமாலினி, தேங்காய் சீனிவாசன், பண்டரி பாய் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சராசரியான வரவேற்பைப் பெற்றது.[1]

அந்த ஒரு நிமிடம்
இயக்கம்மேஜர் சுந்தரராஜன்
தயாரிப்புபழ. கருப்பையா,
ச. சம்பத்
கதைமேஜர் சுந்தரராஜன்,
கே. தினகர் (வசனம்)
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஊர்வசி
ஜெயமாலினி
ஒளிப்பதிவுடி. எசு. விநாயகம்
படத்தொகுப்புஆர். தேவராசன்
கலையகம்கீதாகமலம் மூவிசு
வெளியீடுமே 31, 1985 (1985-05-31)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் டொங்கலா வேட்டகாடு மற்றும் மகான் என்ற பெயரில் இந்தி மொழியில் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

தயாரிப்பு

சென்னையில் உள்ள ஒய். ஜி. மகேந்திரன் வீட்டில் சில காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.[2]

பாடல்கள்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "அலைகளில் மிதக்குது" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 04:27
2 "பச்சோந்தியே கேளடா" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன் 04:28
3 "காத்திருப்பது பாத்திருப்பது" எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04:30
4 "சிறிய பறவை" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 05:50
5 "தேவை இந்த பாவை" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா நா. காமராசன் 04:20
6 "நல்ல நேரம் நேரம்" எஸ். ஜானகி வைரமுத்து 04:04

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அந்த_ஒரு_நிமிடம்&oldid=30026" இருந்து மீள்விக்கப்பட்டது