அஜயன்பாலா
அஜயன் பாலா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் , வசனகர்த்தா, மற்றும் திரைப்பட நடிகர். சென்னையில் வசித்து வரும் இவர் 6 அத்தியாயம் என்னும் படத்தொகையில் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார். ஆனந்த விகடனில் வெளியான "நாயகன்" மூலம் பரவலாக அறிமுகமானவர். ”மயில்வாகனன்” எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். “பை சைக்கிள் தீவ்ஸ்” எனும் திரைக்கதையையும், “மார்லன் பிராண்டோ”வையும் மொழிமாற்றம் செய்துள்ளார். இவர் எழுதிய “உலக சினிமா வரலாறு; மௌனயுகம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள் (இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. வனயுத்தம், சென்னையில் ஒரு நாள், மனிதன் , தியா, லட்சுமி ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து மைலாஞ்சி எனும் திரைப்ப்டத்தை தற்போது இயக்கி வருகிறார். மேலும் மதராசபட்டினம் ,தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம் , வேட்டை, தேவி,வனமகன் ஆகியபடங்களீன் திரைக்கதையில் பங்களித்திருக்கிறார்.
இவர் சித்திரம் பேசுதடி, வால்மீகி, மதராசபட்டினம், தென்மேற்கு பருவக்காற்று, கிருஷ்ணவேணி பஞ்சாலை , போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
படைப்புகள்
நாவல்
- பகல்மீன்கள் (கல்கியில் தொடராக வெளிவந்துள்ளது)
சிறுகதை தொகுப்பு
- மயில் வாகனன் மற்றும் கதைகள் (மருதா பதிப்பகம்)
- மூன்றாவது அறைநண்பனின் காதல்கதை (மூன்றே கதைகள் கொண்ட சிறு வெளியீடு )
- அஜயன் பாலா சிறுகதைகள் (நாதன் பதிப்பகம்)
- முத்துக்கள் பத்து அஜயன் பாலா (அம்ருதா பதிப்பக்ம்)
திரைக்கதை மொழிபெயர்ப்பு
- பேட்டில் ஆப் அல்ஜீயர்ஸ்
- பை சைக்கிள்தீவ்ஸ்
கட்டுரை
- முடிவற்ற கலைஞன்;மார்லன் பிராண்டோ, தன் சரிதம்
- சுமார் எழுத்தாளனும் சூப்பர்ஸ்டாரும்
ஆய்வு
- செம்மொழிச் சிற்பிகள் (100 தமிழறிஞர்கள் வாழ்க்கை வரலாற்று தொகுப்பு )
- உலக சினிமா வரலாறு மவுன யுகம்
- உலக சினிமா வரலாறு பாகம் இரண்டு மறுமலர்ச்சியுகம்
- உலக சினிம வரலாறு பாகம் மூன்று நவீன யுகம்
வாழ்க்கை வரலாறு
- அம்பேத்கர்
- அன்னை தெரஸா
- ஓவியர் வான்கா
- கார்ல்மார்க்ஸ்
- சார்லிசாப்ளின்
- சேகுவேரா
- நெல்சன் மண்டேலா
- நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
- பெரியார்
- மார்டின் லூதர் கிங்
தொகுப்பு நூல்
- ராஜன் அரவிந்தன் கதைகள்
சிறப்பு தகுதிகள்
- 2002 தி வீக் ஆங்கில நாளேடு தமிழின் சிறந்த வளரும் எழுத்தாளராக தேர்வு செய்துள்ளது
- இருபதாம் நூற்றாண்டு சிறந்த சிறுகதைகள்-தொகுப்பில்தேர்வு -கலைஞன் பதிப்பகம்
- கண்னாடி பத்தாண்டு சிறுகதைகள் தொகுப்பு ஆசிரியர் .திலகவதி, அம்ருதா பதிப்பகம்
- சின்னத்திரை விருது தேர்வுக்குழு உறுப்பினர் 2010
விருதுகள்
- இலக்கிய சிந்தனை விருது.
- 2009 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருது
- திராவிடர் கழகம் பெரியார் விருது
- சிறுகதைகளுக்காக 2013ம் ஆண்டு உயிர்மை சுஜாதா விருது
- சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் எழுத்துச் சிற்பி விருது
- திருப்பூர் மத்திய அரிமா சங்க விருது 2013
- இலக்கிய வீதி அன்னம் விருது 2016
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்ப்டம் | உதவி இயக்குனர் | நன்றி | நடிப்பு | எழுத்து | இயக்கம் | |
---|---|---|---|---|---|---|---|
1. | 1998 | லவ் டுடே (திரைப்படம்) | வார்ப்புரு:Aye | ||||
2. | 2002 | சொல்ல மறந்த கதை | வார்ப்புரு:Aye | ||||
3. | 2004 | வானம் வசப்படும் | வார்ப்புரு:Aye | ||||
4. | 2006 | சித்திரம் பேசுதடி | வார்ப்புரு:Aye | ||||
5. | 2007 | பள்ளிக்கூடம் | வார்ப்புரு:Aye | ||||
6. | 2010 | தென்மேற்குபருவக்காற்று | வார்ப்புரு:Aye | ||||
7. | 2010 | மதராசப் பட்டினம் | வார்ப்புரு:Aye | வார்ப்புரு:Aye | |||
8. | 2011 | தெய்வத்திருமகள் | வார்ப்புரு:Aye | ||||
9. | 2012 | தாண்டவம் | வார்ப்புரு:Aye | ||||
10. | 2012 | வேட்டை | வார்ப்புரு:Aye | ||||
11. | 2013 | வனயுத்தம் | வார்ப்புரு:Aye | ||||
12. | 2013 | தலைவா | வார்ப்புரு:Aye | ||||
13. | 2013 | சென்னையில் ஒருநாள்[1] | வார்ப்புரு:Aye | ||||
14. | 2014 | சைவம் | வார்ப்புரு:Aye | ||||
15. | 2016 | மனிதன்[2] | வார்ப்புரு:Aye | ||||
16. | 2017 | வனமகன் | வார்ப்புரு:Aye | வார்ப்புரு:Aye | |||
17. | 2018 | தியா | வார்ப்புரு:Aye | ||||
18. | 2018 | லக்ஷ்மி | வார்ப்புரு:Aye | ||||
19. | 2018 | 6 அத்தியாயம் | வார்ப்புரு:Aye | வார்ப்புரு:Aye | |||
20. | 2019 | நேத்ரா | வார்ப்புரு:Aye | ||||
21. | 2019 | வாட்ச்மேன் | வார்ப்புரு:Aye | ||||
22. | TBA | தலைவி | வார்ப்புரு:Aye | ||||
23. | TBA | நாற்காலி | வார்ப்புரு:Aye | ||||
24. | TBA | மெமோரீஸ் | வார்ப்புரு:Aye |
இசைக்காணொளி
ஆண்டு | பெயர் | இயக்கம் | பாடல் | தயாரிப்பு | |
---|---|---|---|---|---|
1. | 2021 | KIDS Vs coroina | வார்ப்புரு:Aye | வார்ப்புரு:Aye |
குறும்படங்கள்
ஆண்டு | பெயர் | இயக்கம் | தயாரிப்பு | |
---|---|---|---|---|
1. | 2020 | சச்சின் கிரிகெட் கிளப் | வார்ப்புரு:Aye | வார்ப்புரு:Aye |
2. | 2020 | கூட்டாளி | வார்ப்புரு:Aye | வார்ப்புரு:Aye |
வெப் சீரீஸ்
ஆண்டு | பெயர் | இயக்கம் | தயாரிப்பு | |
---|---|---|---|---|
1. | 2020 | லவ் புல்லட் | வார்ப்புரு:Aye | வார்ப்புரு:Aye |
மேற்கோள்கள்
- ↑ Menon, Vishal (19 July 2015). "Making a remake". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/making-a-remake/article7438722.ece.
- ↑ "Udhayanidhi Stalin's 'Manithan' joins his 'Decent Films' List - Tamil News". 13 April 2016. https://www.indiaglitz.com/udhayanidhi-stalin-hansika-manithan-gets-clean-u-certificate-from-censor-board-tamil-news-156707.